தமிழகத்தில் சாம்பார் சாதம் எந்தளவிற்கு பிரபலமோ அந்த அளவிற்கு கர்நாடகா சமையலில் பிஸிபேளாபாத் பிரபலமாகும். பிஸிபேளாபாத் மைசூருவை பூர்விகமாகக் கொண்ட அற்புதமான உணவாகும். அதாவது வட இந்தியாவில் கிச்சடி எப்படி பிரபலமோ அதுபோல கர்நாடகாவில் பிஸிபேளாபாத் ஃபேமஸ்.
பிஸிபேளா பாத்திற்கும் சாம்பார் சாதத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. குறிப்பாக பிஸிபேளாபாத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு எக்காரணம் கொண்டும் சேர்க்கப்படாது. பிஸி என்றால் சூடு, பேளா என்றால் பருப்பு, பாத் என்றால் பருப்பு மற்றும் அரிசியை சேர்த்து செய்யக்கூடிய சாதமாகும். பிஸிபேளாபாத்தில் பொதுவாக காய்கறிகள் சேர்க்கப்படாது.
ஆனால் தற்போது கர்நாடக மக்கள் காய்கறிகளை சேர்த்து சமைக்கின்றனர். நீங்கள் விருப்பபட்டால் காய்கறிகள் சேர்க்கலாம். ஆனாம் நாம் காய்கறிகள் சேர்க்காமல் சமைப்பது எப்படி என பார்க்கப் போகிறோம். இந்த சமையலில் இறுதிவரை ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். ஏலக்காய் மற்றும் வெங்காயத்தை எக்காரணம் கொண்டும் சேர்க்க கூடாது.
பிஸிபேளா பாத் செய்யத் தேவையானவை
- அரிசி
- கடலை பருப்பு
- உளுந்தம் பருப்பு
- துவரம் பருப்பு
- காய்ந்த மிளகாய்
- கசகசா
- இலவங்கம்
- பட்டை
- ஜீரகம்
- வெந்தயம்
- தனியா
- பிரிஞ்சி இலை
- கொப்புரை தேங்காய்
- எண்ணெய்
- கடுகு
- முந்திரி
- புளி தண்ணீர்
- வெள்ளம்
- தண்ணீர்
- மஞ்சள் தூள்
கவனம் கொள்க
பிஸிபேளா பாத் சமைக்கும் முன் 100 கிராம் அரிசி மற்றும் 75 கிராம் துவரம் பருப்பை குக்கரில் போட்டு ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி நான்கு விசிலுக்கு வேக வைக்கவும்.
பிஸிபேளாபாத் செய்முறை
- முதலில் பிஸிபேளாபாத் செய்வதற்கு பிஸிபேளாபாத் பவுடர் தயாரிக்க வேண்டும். இந்த பவுடர் தயாரிக்க கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் ஒரு முறை தயாரித்து வைத்தால் ஆறு மாதங்களுக்கு கூட பயன்படுத்தலாம்.
- பிஸிபேளாபாத் பவுடர் தயாரிக்க நாம் பெரிதும் எண்ணெய் பயன்படுத்தமாட்டோம். ஒரு சில இடங்களில் மட்டுமே எண்ணெய் தேவைப்படும்
- அடுப்பில் பேன் வைத்து ஒன்றரை கப் கடலை பருப்பு போட்டு எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும். தீயின் வேகம் குறைவாகவே இருக்கட்டும்.
- கடலை பருப்பின் பச்சை வாடை பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டுங்கள்
- அடுத்தாக எண்ணெய் இல்லாமல் ஒன்றரை கப் உளுத்தம் பருப்பு, ஒன்றரை கப் கசகசா ஆகியற்றை வறுக்கவும். கசகசா சீக்கிரமாகப் பொறிந்துவிடும். அதனால் அதை கருக்கி விடக் கூடாது
- உளுத்தம் பருப்பு பொன்னிறத்திற்கு மாறியவுடன் கடலை பருப்பை கொட்டிய அதே பாத்திரத்தில் உளுத்தம் பருப்பையும், கசகசாவையும் போடுங்கள்.
- இதைத் தொடர்ந்து ஒன்றரை கப் காய்ந்த மிளகாய், 20 கிராம் இலவங்கம், 40 கிராம் பட்டை, 20 கிராம் ஜீரகம், பத்து கிராம் வெந்தயம், இரண்டு கை அளவிற்கு தனியா, நான்கு பிரிஞ்சி இலை ஆகியவற்றை தனித் தனியே பேனில் போட்டு வறுக்கவும்
- அடுத்ததாகப் பேனில் ஆறு ஸ்பூன் கோல்டு வின்னர் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு 50 கிராம் கொப்புரை தேங்காயை துருவி வறுக்கவும்.
- இதன் பிறகு அனைத்தையும் தரையில் ஒரு பேப்பர் விரித்து அதில் போட்டு 20 நிமிடங்களுக்கு உள்அறை வெப்பத்தில் ஆற விடவும்
- அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு பவுரடாக நன்கு அரைத்து விடவும். இந்த பவுடர் கொப்புரை தேங்காய் பயன்படுத்தாமல் அரைத்திருந்தால் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்த முடியும். கொப்புரை தேங்காய் பயன்படுத்தியதால் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.
- தற்போது பேனில் கோல்டு வின்னர் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு கடுகு, முந்திரி மற்றும் புளித் தண்ணீர், 50 கிராம் வெள்ளம் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- ஆறு நிமிடங்களில் பச்சை வாடை போன பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- ஏறக்குறைய 75 விழுக்காடு சமையல் முடிந்துவிட்டது. அடுத்ததாக வேக வைத்த துவரம் பருப்பு மற்றும் அரிசியை கொதிக்கும் தண்ணீரில் போடவும்.
- குறைந்த தீயில் ஏழு நிமிடங்களுக்கு வேக விடவும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேருங்கள்.
- தற்போது இரண்டரை ஸ்பூன் பிஸிபேளா பாத் பவுடரை 40 மில்லி தண்ணீரில் கலந்து அதை கொதிக்கும் சாதத்தில் ஊற்றவும்
- அடுத்ததாக கால் ஸ்பூன் பெருங்காயத் தூள், கொத்தமல்லி போட்டு இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை ஆஃப் செய்துவிடுங்கள்.
இறுதியாக ஒன்றரை டீஸ் ஸ்பூன் நெய் ஊற்றினால் பிஸிபேளாபாத் கம கமக்கும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation