herzindagi
quick and easy mixed vegetable chutney

Vegetable Chutney : ஒரு கப் காய்கறி இருந்தா போதும் 5 நிமிஷத்துல கதம்ப சட்னி செய்திடலாம்

இட்லி, தோசைக்கு மாவு கூட சுலபமாக அரைத்து விடலாம், ஆனால் அதற்கு ஏற்ற சட்னியை முடிவு செய்வது கடினம்  என நினைக்கிறீர்களா? உங்களுக்கான பதிவு இது…
Editorial
Updated:- 2023-03-29, 09:47 IST

கதம்ப சட்னி செய்வதற்கு வீட்டில் உள்ள எந்த காய்கறிகளை வேண்டுமானாலும் கலவையாக ஒரு கப் எடுத்துக் கொள்ளலாம். ஃபிரிட்ஜில் மீதமுள்ள காய்கறிகளிகளை பயன்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். முட்டைக்கோஸ், சுரைக்காய், குடமிளகாய், மஞ்சள் பூசணி, முள்ளங்கி, காலிஃபிளவர், சௌசௌ, பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளில் உங்களுக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

என்ன தான் சட்னி புதுமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று யோசித்தாலும், வேலையும் சீக்கிரம் முடிய வேண்டும் இல்லையா? காய்கறிகளை நறுக்கி தயாராக வைத்து விட்டால் போதும், 5 நிமிடத்தில் இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் ஆன சட்னி செய்திடலாம். இதற்கான செய்முறையை இப்போது பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நெஞ்சு சளி மற்றும் இருமலை குணப்படுத்தும் இடிச்ச நண்டு சாறு

தேவையான பொருட்கள்

  • உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 10
  • தக்காளி - 1 நறுக்கியது
  • இஞ்சி - சிறிய துண்டு
  • பச்சை மிளகாய் 2-3
  • தேங்காய் துருவல் - ¼ கப்
  • சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி
  • புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

vegetable chutney recipe in tamil

தாளிப்பதற்கு

  • கடுகு - 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் 2-3
  • பெருங்காயம் ¼ டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு

இந்த பதிவும் உதவலாம்: வெயிலை சமாளிக்க இப்படி ஒரு கம்பங்கூழ் செய்து குடிங்க

செய்முறை

mixed vegetable chutney

  • முதலில் தேவையான காய்கறிகள் அனைத்தையும் சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இதில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
  • பின்னர் சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாற வேண்டிய அவசியம் இல்லை, லேசாக வதங்கினால் போதுமானது.
  • இதனுடன் நறுக்கி வைத்துள்ள ஒரு கப் காய்கறி கலவையை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, கடாயை மூடி வேக வைக்கவும்.
  • காய்கறிகள் வெந்த பிறகு இதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
  • இறுதியாக தேங்காய் துருவல் மற்றும் புளி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
  • சூடு தணிந்த பின், வதக்கிய காய்கறிகளை மிக்ஸி ஜாரில் மாற்றி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • இப்போது தாளிப்பதற்கு நல்லெண்ணையை சூடாக்கி அதில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். தாளிப்பை சட்னியில் சேர்த்து இட்லி அல்லது தோசையுடன் பரிமாறலாம்.
  • இதை கட்டியாக அரைத்து சாதத்திற்கு தொட்டுக்கொள்ள துவையலாகவும் பரிமாறலாம்.
  • இந்த ஆரோக்கியமான கதம்ப சட்னியை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]