herzindagi
kambangool recipe during summer

வெயிலை சமாளிக்க இப்படி ஒரு கம்பங்கூழ் செய்து குடிங்க

அடிக்கிற வெயிலில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இது போன்ற பாரம்பரிய உணவுகளை வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யலாம்&hellip; <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-03-28, 09:29 IST

கோடை காலத்தில் உங்கள் உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்தூக்கொள்ள தர்பூசணி, நுங்கு, வெள்ளரி போன்ற பருவ கால பழங்களுடன் இதுபோன்ற உணவுகளையும் சேர்த்துக் கொள்வது நல்லது. நார்ச்சத்து நிறைந்த கம்பு ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும். கம்பங்கூழ் உடன் சின்ன வெங்காயம் மற்றும் மோர் கலந்து சாப்பிட்டால் வயிறு நிறைவதுடன் உடலும் குளிர்ந்து விடும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாங்காய், மிளகாய் போன்ற கூடுதல் விஷயங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

பாரம்பரிய முறைப்படி முழு கம்பை ஊற வைத்து அரைத்து இந்த கம்பங்கூழ் செய்யப்படுகிறது. கம்புக்கு பதிலாக உடைத்த கம்பு அல்லது கம்பு மாவை பயன்படுத்தி இதே முறையில் கம்பங்கூழ் செய்து குடிக்கலாம். வெப்பமான கோடை நாட்களில் உங்கள் உடலுக்கு உடனடி குளிர்ச்சி தரும் கம்பங்கூழின் செய்முறையை இப்பதிவில் படித்தறியலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சி தரும் அற்புத பானங்கள்

தேவையான பொருட்கள்

pearl millet porridge

  • கம்பு 1/2 கப்
  • தண்ணீர் - 2 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • மோர் - தேவையான அளவு

செய்முறை

  • கம்பை இரவு முழுவதும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.
  • ஊறிய கம்பிலிருந்து தண்ணீரை வடிகட்டி விட்டு, கம்பை மட்டும் மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
  • தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
  • இப்போது ஒரு பிரஷர் குக்கரில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதிக்கும் நீரில் பொடித்து வைத்துள்ள கம்பை சேர்த்து கிளறி குக்கரை மூடவும்.
  • மிதமான தீயில் 3 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
  • பிரஷர் குக்கரில் இருந்து தானாக பிரஷர் வெளியானவுடன், மூடியைத் திறந்து ஒரு முறை கிளறவும்.
  • இப்போது நீர்க்க இருப்பது போல் இருக்கும், ஆறிய பின் சரியான பக்குவத்திற்கு வந்து விடும்.
  • இவை நன்கு ஆறியதும், கைகளை ஈரமாக்கி சமைத்த கம்பிலிருந்து ஒரு பகுதியை எடுத்து உருட்டி கொள்ளவும்.
  • மீதமுள்ள களியையும் உருட்டி வைக்கவும். நீங்கள் விரும்பினால் இந்த களியை குழம்புடன் சேர்த்து சாப்பிடலாம்.

kambu koozh tamilnadu food

  • கம்பங்கூழ் செய்வதற்கு உருட்டி வைத்துள்ள கம்பங்களியை தண்ணீரில் சேர்த்து இரவு முழுவதும் புளிக்க விட வேண்டும். இதை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • மறுநாள் காலையில் தேவையான அளவு களி மற்றும் ஊற வைத்துள்ள தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். இதனை கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மோர் கலந்து பரிமாறலாம். சின்ன வெங்காயம் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும். உங்களுக்கு விருப்பமான காம்பினேஷன் உடன் இந்த அருமையான கம்பங்கூழை குடித்து மகிழுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: இளநீர் வழுக்கையை வைத்து புதுமையான 2 ரெசிபிக்கள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]