herzindagi
tender coconut malai recipes

Coconut Smoothie and Icecream : இளநீர் வழுக்கையை வைத்து புதுமையான 2 ரெசிபிக்கள்

சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த இளநீர் வழுக்கையை கொண்டு செய்யப்படும் இரண்டு அட்டகாசமான ரெசிபிக்களை இப்பதிவில் பார்க்கலாம்...
Editorial
Updated:- 2023-03-22, 12:00 IST

கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயிரம் பானங்களை குடித்தாலும் சரி, வேறெதுவும் இளநீருக்கு நிகராக இருக்க முடியாது. இளநீரை குடித்து முடித்த பிறகு, அதில் இருக்கும் தேங்காய் அல்லது வழுக்கையை வெட்டி சாப்பிடுவதில் இருக்கும் ஆனந்தம் வேறு எந்த குளிர்பானத்திலும் கிடைக்காது. அதிலும் வழுக்கையான தேங்காய் என்றால் டபுள் சந்தோஷம் தான். சுவை நிறைந்த இந்த இளநீர் வழுக்கையை மேலும் சுவையாக மாற்ற வேண்டுமா? இப்பதிவில் பகிரப்பட்டுள்ள இரண்டு ரெசிபிக்களை முயற்சி செய்து பாருங்கள்

இளநீர் ஸ்மூத்தி

இளநீர் வழுக்கையை வைத்து ஏதாவது வித்தியாசமாக முயற்சி செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்த இளநீர் ஸ்மூத்தியை முயற்சி செய்து பாருங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: கொத்தமல்லியை நீண்ட நாட்களுக்கு ஃபிரஷாக வைத்திருப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

  • இளநீர் வழுக்கை
  • தண்ணீர்
  • தேன்
  • வெண்ணிலா எசன்ஸ்

செய்முறை

coconut malai smoothie

  • முதலில் ஒரு மிக்ஸர் ஜாரில் இளநீர் வழுக்கை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் நான்கு துளி வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்
  • வெறும் ஐந்து நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த ஸ்மூத்தி ரெசிபியை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

குறிப்பு

இளநீர் வழுக்கையை அதிக நேரம் அரைக்க கூடாது. இதன் சுவையை அதிகரிக்க தேவைப்பட்டால் நட்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

இளநீர் வழுக்கை ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம் என்றாலே மனம் குஷி ஆகிவிடும் அதிலும் இளநீர் ஐஸ்கிரீம் என்று சொன்னால் கேட்கவா வேண்டும். ஆரோக்கியமான இந்த ஐஸ்கிரீமை உங்கள் குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்

  • இளநீர் வழுக்கை
  • இளநீர்
  • திக் கிரீம்
  • சர்க்கரை
  • வெண்ணிலா எசென்ஸ்

இந்த பதிவும் உதவலாம்: செட்டிநாடு ஸ்டைலில் கலக்கலான வாழைக்காய் கோலா உருண்டை ரெசிபி

செய்முறை

coconut malai icecream

இளநீர் வழுக்கை மற்றும் இளநீரை ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து நன்கு அரைக்கவும். இதனுடன் திக் க்ரீம், சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இவை எல்லாம் ஒன்று சேர்ந்த பிறகு ஒரு பாக்ஸில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும் சிறிது நேரத்தில் ஐஸ்கிரீம் முழுதாக செட் ஆகி விடும்.

குறிப்பு

இதனை அரைக்க மிக்ஸிக்கு பதிலாக ஸ்டிக் பிளெண்டரையும் பயன்படுத்தலாம். ஐஸ்கிரீம் நன்றாக செட்டாக 5-6 மணி நேரங்கள் வரை ஆகலாம். நீங்கள் விரும்பினால் இதில் நட்ஸ் சேர்த்து பரிமாறலாம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]