herzindagi
Pista Kulfi

Kulfi recipe : உள்ளங்களை கொள்ளையடிக்கும் குல்ஃபி செய்முறை!

வீட்டிலேயே குல்ஃபி ஐஸ்கிரீம் செய்வது எப்படி ? இதோ உங்களுக்கான எளிய செய்முறை 
Editorial
Updated:- 2024-02-24, 19:32 IST

ஐஸ்கிரீம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. மனிதர்கள் மட்டுமல்ல இதர உயிரினங்களும் ஐஸ்கிரீம் விரும்பி சாப்பிடுவதை பார்த்திருப்போம். வீட்டில் ஐஸ்கிரீமை தயார் செய்தால் அது பிராண்டட் நிறுவனங்கள் தயாரிக்கும் சுவையில் இருக்காது. ஆனால் குல்ஃபி அப்படி அல்ல. வீட்டிலேயே இதை எளிதாகத் தயாரித்து சுவைக்கலாம். விடுமுறை நாட்களில் இந்த குல்ஃபியை தயார் செய்து உங்கள் மனதிற்கு பிடித்தமான நபருடன் பகிர்ந்து மகிழுங்கள். 

குல்ஃபி ஐஸ்கிரீம் செய்வதற்கு தேவையான 

Milk

  • 200 மில்லி லிட்டர் குளிரூட்டப்பட்ட பால்
  • 2 கப் விப்பிங் கிரீம்
  • 2 கப் பிஸ்தா
  • 2 ஸ்பூன் அளவிற்கு வெண்ணிலாச்சாறு
  • ஏலக்காய்
  • 2 சிட்டிகை குங்குமப்பூ

மேலும் படிங்க மாலை பொழுதை இனிமையாக்கிடும் மாம்பழ அல்வா

குல்ஃபி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

Tasty Kulfi

  • ஒரு சிறிய பாத்திரத்தில் குங்குமபூக்களை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்
  • சுண்டப்பட்ட பாலை குளிர்ச்சியாக்க குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்
  • இதன் பிறகு க்ரீமை ஒரு கலவையைக் கொண்டு அது கடினமாகும் வரை சற்று வேகமாக அடிக்க வேண்டும்
  • பின்னர் வேகத்தைக் குறைத்து கிரீமுடன் சுண்டப்பட்ட பாலையும்  வெண்ணிலா சாரையும் சேர்க்கவும்
  • அடுத்ததாகக் கலவையின் வேகத்தை மேலும் அதிகரித்து  கிரீமுடன் சேர்க்கப்பட்ட சுண்டப்பட்ட பாலையும் வெண்ணிலா சாரையும் கடினமாக்கவும்
  • இவற்றுடன் தற்போது பிஸ்தா, ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ கலந்த திரவத்தைச் சேர்க்கவும். இதன் மூலம்  குல்ஃபி ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான பேஸ் உருவாக்கப்பட்டு விட்டது. இவை அனைத்தும் நன்றாக சேரும்படி மீண்டும் கலவையைப் பயன்படுத்துவது அவசியமாகும்.
  • இறுதியாகச் சுமார் ஆறு மணி நேரம் இதனை ஃப்ரீசரில் வைத்தபிறகு இனிப்பான குல்பி ஐஸ்கிரீம் தயாராகிவிடும்.

மேலும் படிங்க ரவா லட்டு முதல் பாலாடை பாயாசம் வரை! தித்திக்கும் கேரளா

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]