herzindagi
delicious mango halwa

Mango Halwa Recipe : சுவையான மாம்பழ அல்வா செய்வது எப்படி?

இந்தியளவில் 18 வகையான அல்வா வகைகள் உள்ளன. இதில் மாம்பழ அல்வா அனைவராலும் விரும்பப்படும் அல்வா ஆகும்.
Editorial
Updated:- 2024-02-24, 19:27 IST

வார விடுமுறை நெருங்கி விட்ட காரணத்தால் ஞாயிற்றுகிழமை மாலை என்ன சுவைக்கலாம் என யோசித்து கொண்டிருப்போம். இனிப்புகள் தயாரித்து அனைவருக்கும் அதனைப் பகிர்ந்து சாப்பிடுவது மாலை பொழுதை இனிமையாக்கும். அதனால் மாம்பழ அல்வா எப்படி செய்வது என இந்தக் கட்டுரையில் பகிர்ந்துள்ளோம். பல வகையான அல்வாக்களை நீங்கள் ருசித்து இருக்கலாம். ஆனால் இது சற்று வித்தியாசமானது. 

mangoes

மாம்பழ அல்வா செய்ய தேவையானவை

  • 2 கப் மாம்பழ கூழ்
  • கால் கப் சக்கரை
  • ஏலக்காய் 
  • 1 டீஸ்பூன் குங்குமப்பூ
  • 6 டீஸ்பூன் நெய்
  • பொடிதாக்கப்பட்ட 8 - 10 முந்திரிப்பருப்பு
  • பொடிதாக்கப்பட்ட 8 - 10  பிஸ்தா பருப்பு

pistachio

மேலும் படிங்க வாசகர்களுக்கான ஸ்பெஷல் தின்பண்டம் : மொறுமொறு பன்னீர் எள் பக்கோடா

சுவையான மாம்பழ அல்வா செய்வது எப்படி

  • இரண்டு நிமிடங்களுக்கு ஒரு நான்ஸ்டிக் பேனில் மாம்பழ கூழை கொதிக்க வைக்கவும்
  • அதன் பிறகு தீயை சற்று குறைத்து சக்கரையை சேர்க்க வேண்டும், இப்படி செய்வதன் மூலம்  மாம்பழ கூழ் முதலில் திரவ நிலையில் இருந்து கடினமாக மாறும்
  • பேனில் ஒட்டும் நிலை ஏற்பட்டால் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். குறைந்த சூட்டிலேயே இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்
  • மீண்டும் ஒட்டுவது போல் தோன்றினாள் தேவையான அளவு நெய் சேர்க்கவும்
  • இறுதியாக அனைத்தும் நன்றாகக் கலந்து ஒரு பந்து போல் சுழலும். பிறகு மீதமிருக்கும் நெய்யை சேர்த்தால் பக்குவமான அளவில் பளபளப்பான மாம்பழ அல்வா தோற்றத்தினை பார்க்க முடியும்.
  • பிறகு அரை ஸ்பூன் நெய்யில் முந்திரிப் பருப்புகளை நன்றாக பொன்னிறத்தில் வறுத்து அல்வாவுடன் சேர்க்கவும்
  • இறுதியில் ஏலக்காய், குங்குமப் பூ, பிஸ்தா சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கிளறி பேனை நிறுத்தி விடலாம். தற்போது சுவையான மாம்பழ அல்வா ரெடி.

மேலும் படிங்க 20 ஸ்டெப் தான்! வீட்டிலேயே சுவையான பீட்சா ரெடி

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]