பழுக்காத பப்பாளி இருந்தால் சுவையான டுட்டி ஃப்ரூட்டி தயாரிக்கலாம்; குட்டீஸுக்கு பிடிக்கும்

பப்பாளி பழுக்கும் முன்பாகவே நறுக்கிவிட்டு என்ன செய்வதென்று குழப்பமா ? குழந்தைகளுக்கு பிடித்தமான டுட்டி ஃப்ரூட்டி தயாரிக்கலாம். அரை மணி நேரம் போது பழுக்காத பப்பாளியை டுட்டி ஃப்ரூட்டியாக மாற்றலாம்.
image

ஐஸ் க்ரீம், கேசரி, பீடா போன்றவற்றை சாப்பிடும் போது வாயில் சிக்குவது டுட்டி ஃப்ரூட்டி. கலர் பூசப்பட்ட சிறிய கற்கண்டு போல் இருக்கும் டுட்டி ஃப்ரூட்டி எதில் சேர்த்தாலும் சுவையை அதிகரித்து கொடுக்கும். குழந்தைகளுக்கு டுட்டி ஃப்ரூட்டி மிகவும் பிடிக்கும். டுட்டி ஃப்ரூட்டி செய்வதற்கு பழுக்காத பப்பாளி அல்லது பப்பாளி காய் போதுமானது. 4-5 பொருட்கள் இருந்தால் போதும் டுட்டி ஃப்ரூட்டி தயாரித்துவிடலாம். சர்க்கரை பாகு செய்ய தெரிந்தால் வேலை சுலபமாகிவிடும். வாருங்கள் டுட்டி ஃப்ரூட்டி செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

tutti frutti making

டுட்டி ஃப்ரூட்டி செய்ய தேவையானவை

  • பப்பாளி
  • சர்க்கரை
  • தண்ணீர்
  • ரோஸ் எசன்ஸ்
  • கேசரி பவுடர்
  • வெண்ணிலா எசன்ஸ்
  • பைனாப்பிள் எசன்ஸ்
  • டிஷ்யூ பேப்பர்

மேலும் படிங்கஐதராபாத் ஃபேமஸ் கராச்சி பிஸ்கட் ருசிக்க ஆசையா ? ரெசிபி இங்கே

டுட்டி ஃப்ருட்டி செய்முறை

  • முதலில் அரை கிலோ பழுக்காத பப்பாளி எடுத்து (பப்பாளி காய்) தோல் சீவுங்கள். உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிடவும்.
  • அரை கிலோ பப்பாளியை நறுக்கினால் மூன்று கப் அளவுக்கு டுட்டி ஃப்ரூட்டி தயாரிக்கலாம்.
  • ஒரு கடாயில் 6 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்தவுடன் சின்ன சின்ன பப்பாளி துண்டுகளை போட்டு மிதமான சூட்டில் 6-7 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
  • குளைந்துவிடாமல் ஓரளவு வேகவிட்டு தண்ணீரை வடிகட்டி பப்பாளி துண்டுகளை எடுத்துவிடுங்கள்.
  • கடாயில் 200 கிராம் சர்க்கரை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு தயாரிக்கலாம். சிறிது நேரம் கழித்து இதில் பப்பாளி துண்டுகளை போடவும்.
  • ஒரு கம்பி பதம் வந்தவுடன் சூடுபடுத்துவதை நிறுத்திவிட்டு பப்பாளி துண்டுகளை வெளியே எடுத்துவிடவும். சர்க்கரை பாகு நன்றாக இறங்கி இருக்கும்.
  • பப்பாளி துண்டுகளை நான்காக பிரித்து ரோஸ் எசன்ஸ் இரண்டு சொட்டு, கேசரி பவுடர் கொஞ்சம், இரண்டு சொட்டு வெண்ணிலா எசன்ஸ், இரண்டு சொட்டு பைனாப்பிள் எசன்ஸ் விட்டு கலந்துவிடுங்கள்.
  • 10 நிமிடங்கள் கழித்து டிஷ்யூ பேப்பரில் இவற்றை போட்டு உலர்த்துங்கள். வெயிலில் வைக்க வேண்டிய அவசியமில்லை.
  • ஈரப்பதம் முற்றிலும் போன பிறகு கலந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிவிடுங்கள்.
  • இதில் முக்கியமான விஷயம் கர்ப்பிணிகள் எக்காரணத்திற்கும் பப்பாளி சாப்பிட வேண்டாம்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP