ஐதராபாத் மாநகரில் சுற்றுலா மேற்கொள்ளும் போது ஸ்பெஷல் உணவுகள் பற்றி கேட்டால் தம் பிரியாணிக்கு அடுத்தபடியாக கராச்சி பிஸ்கட் பற்றி சொல்லுவார்கள். ஐதராபாத்தில் பெரும்பாலான தேநீர் கடைகளில் டீ, காஃபியுடன் ருசிப்பதற்கு இந்த பிஸ்கட் வழங்கப்படும். இந்த பிஸ்கட்டின் சுவை தனித்துவமானது. டீ உடன் இரண்டு கராச்சி பிஸ்கட் சாப்பிட்டாலே வயிறு நிரம்பியது போல தெரியும். ஐதராபாத் கராச்சி பிஸ்கட் செய்ய தொடங்கிய காலத்தில் இன்று வரை இயந்திர பயன்பாட்டிற்கு மாறாமல் கைகளிலேயே தயாரிக்கின்றனர். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் மட்டுமே ஐதராபாத் கராச்சி பிஸ்கட் கிடைக்கும். இதை வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.
ஐதராபாத் கராச்சி பிஸ்கட் செய்ய தேவையானவை
- மைதா மாவு
- வெண்ணெய்
- பட்டர் பேப்பர்
- சர்க்கரை
- நெய்
- பால்
- ரோஸ் எசன்ஸ்
- டூட்டி ஃப்ரூட்
மேலும் படிங்கஅட்டகாசமான சுவையில் வேலூர் ஸ்பெஷல் மீன் சேமியா; செஞ்சு ருசி பாருங்க
ஐதராபாத் கராச்சி பிஸ்கட் செய்முறை
- ஒரு பாத்திரத்தில் 100 கிராம் வெண்ணெய் எடுத்து விஸ்க் வைத்து நன்கு அடித்து கலக்கவும்.
- இதோடு மிக்ஸியில் பொடியாக்கப்பட்ட ஒரு கப் சர்க்கரை சேர்த்து கலக்குங்கள். விஸ்க் வைத்து அடித்து கொண்டே இருந்தால் கிரீமி பதம் வரும்.
- அடுத்ததாக காய்ச்சி ஆற வைத்த பால் நான்கு ஸ்பூன் ஊற்றுங்கள். வெண்ணெய் உடன் பால் சேர்வதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கவும். கலந்துவிட்டு கொண்டே இருங்கள்.
- இப்போது ரோஸ் எசன்ஸ் இரண்டு சொட்டு ஊற்றவும். நீங்கள் வெண்ணிலா எசன்ஸ் அல்லது பைனாப்பிள் எசன்ஸ் கூட பயன்படுத்தலாம்.
- எசன்ஸ் கலந்த பிறகு ஒன்றரை கப் மைதா சேர்க்கவும். இதோடு அரை கப் கஸ்டர்ட் பவுடர், ஒரு டீஸ்பூன் பேக்கிங் படவுர் போடுங்கள்.
- இவை அனைத்தையும் சல்லடையில் சலித்து சேர்க்கவும். அடுத்ததாக அரை கப் டூட்டி ஃபரூட் போடுங்கள்.
- மீண்டும் இரண்டு ஸ்பூன் பால் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல் கைகளால் பிசையவும்.
- பட்டர் பேப்பரில் மாவை வைத்து மூடி ஒரு மணி நேரத்திற்கு ஃப்ரிட்ஜில் வையுங்கள்.
- அதன் பிறகு கூர்மையான கத்தியால் பீஸ் போட்டு பேக்கிங் செய்ய தயாராகுங்கள். பிஸ்கட் மிகவும் மொறுமொறுப்பாக வேண்டுமென்றால் கஸ்டர்ட் பவுடர் சேர்க்கும் போது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ளுங்கள்.
- பேக்கிங் ஓவனில் பிஸ்கட் மாவு வைப்பதற்கு முன்பாக 180 டிகிரியில் 10 நிமிடங்களுக்கு சூடுபடுத்தவும். அதன் பிறகு 12 நிமிடங்களுக்கு பேக்கிங் செய்தால் கராச்சி பிஸ்கட் ரெடி.
பேக்கிங் ஓவன் இல்லாதவர்கள் கடாய் பயன்படுத்தலாம். சில்வர் தட்டில் பிஸ்கட் மாவு வைத்து 20 நிமிடங்களுக்கு நன்றாக சூடுபடுத்தினால் கராச்சி பிஸ்கட் கிடைக்கும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation