herzindagi
image

அட்டகாசமான சுவையில் வேலூர் ஸ்பெஷல் மீன் சேமியா; செஞ்சு ருசி பாருங்க

வேலூர் ஸ்பெஷல் மீன் சேமியா செய்முறையை இந்த பதிவில் பார்க்கலாம். வேலூர் சென்றால் மீன் சேமியா ருசிக்காமல் ஊருக்கு திரும்பாதீர்கள். மீனும் சேமியாவும் சேர்த்து சமையலா என சந்தேகிக்காதீர்கள். சுவை அருமையாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-01-30, 18:50 IST

வேலூர் மாவட்டத்தின் அடையாளமான வேலூர் கோட்டை பகுதியில் மாலை நேரத்தில் சாலையோரத்தில் உள்ள கடைகளில் மீன் சேமியா கிடைக்கும். வேலூர் மாநகரில் கிடைக்ககூடிய ஸ்பெஷல் உணவுகளில் ஒன்றாக மாறி வருகிறது. இதன் பெயர் தான் மீன் சேமியா. எனினும் சேமியா பயன்படுத்தமாட்டார்கள். இடியாப்பம் பயன்படுத்தி மீன் சேமியா தயாரிக்கப்படும். சுட சுட சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும். இதை வீட்டில் செய்வதற்கு உங்களுக்கு கொத்து பரோட்டா போட தெரிந்திருக்க வேண்டும். வாருங்கள் இதன் செய்முறையை பார்க்கலாம்.

vellore fish semiya recipe

வேலூர் மீன் சேமியா செய்ய தேவையானவை

  • காய்ந்த மிளகாய்
  • மீன்
  • இடியாப்பம்
  • இஞ்சி
  • பூண்டு
  • கறிவேப்பிலை
  • எண்ணெய்
  • மிளகு தூள்
  • சோள மாவு
  • பச்சை மிளகாய்
  • வெங்காயம்
  • தக்காளி

மேலும் படிங்க  வீட்டில் தயாரித்த குழம்பு மிளகாய் பொடி, கரம் மசாலா; கமகமக்கும் வாசனையில்

வேலூர் மீன் சேமியா செய்முறை

  • முதலில் 10 காய்ந்த மிளகாய், 10 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சியை 150 மில்லி லிட்டர் சுடு தண்ணீரில் 15 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள். அதன் பிறகு மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல அரைக்கவும்.
  • இதில் பாதி எலுமிச்சையின் சாறு சேருங்கள். கூட ஒரு டீஸ்பூன் உப்பு போடுங்கள்.
  • அடுத்ததாக 2 ஸ்பூன் சோளமாவு இரண்டு ஸ்பூன் சேருங்கள். இவற்றை மீன் துண்டுகளில் தடவி வைக்கவும்.
  • பேனில் எண்ணெய் ஊற்றி மீன் துண்டுகளை இருபுறமும் தலா மூன்று நிமிடங்களுக்கு வறுத்து எடுக்கவும்.
  • அதே பேனில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் ஒன்றை பொடிதாக வெட்டி போடவும். இதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலை சேருங்கள்.
  • சிறிது நேரம் கழித்து 2 வெங்காயத்தை பொடிதாக நறுக்கி போட்டு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்தால் சீக்கிரமாக வதங்கிவிடும்.
  • அடுத்ததாக ஒரு பெரிய தக்காளி போட்டு மீதம் இருக்கும் பேஸ்ட்டை சேர்க்கவும்.
  • பச்சை வாடை போன பிறகு ஒரு முட்டையை உடைத்து ஊற்றுங்கள். இரண்டு இடியாப்பத்தை போட்டு கொத்து பரோட்டா செய்வது போல் கொத்தவும்.
  • இதோடு ஒரு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் மிளகு தூள் போடுங்கள். சிறிது நேரத்தில் சுவையான வேலூர் மீன் சேமியா ரெடி.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]