herzindagi
smoothie recipe for low bp problem

Low BP Smoothies : குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையா? இந்த ஸ்மூத்திகளை ட்ரை பண்ணுங்க!

உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், அதை சரி செய்ய நிபுணர்கள் பரிந்துரை செய்யும் இந்த ஸ்மூத்திகளை முயற்சி செய்யலாம்…
Expert
Updated:- 2023-05-12, 09:47 IST

குறைந்த இரத்த அழுத்தத்தை ஆங்கிலத்தில் ஹைபோடென்ஷன் என்று அழைக்கிறார்கள். ஆரோக்கியமாக இருக்கும் ஒரு நபரின் இரத்த அழுத்தம் 120/80 ஆக இருக்க வேண்டும். ஒரு நபரின் இரத்த அழுத்தம் 90/60 க்கு கீழே குறையும் பொழுது அதை ஹைப்போடென்ஷன் என்று குறிப்பிடுகிறார்கள். இரத்த அழுத்தம் குறையும்பொழுது நிலை மோசமாகலாம்.

கர்ப்பம், குறைந்த இரத்த சர்க்கரை அளவு, மருந்துகள், வெப்ப பக்கவாதம், கல்லீரல் நோய் போன்ற பல்வேறு காரணங்களினால் இரத்த அழுத்தம் குறையலாம். குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு சோர்வு, தலைசுற்றல், மயக்கம், குமட்டல் போன்ற அறிகுறிகள் இருக்கும். குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையை சரி செய்ய மருந்துகளை எடுத்துக் கொள்வதோடு மட்டுமின்றி, உணவிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: ஈஸியா எடையை குறைக்கணுமா? இந்த மாதிரி இஞ்சி டீ போட்டு குடிங்க!

குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையை சமாளிக்க ஆரோக்கியமான சில ஸ்மூத்திகளையும் குடிக்கலாம். இது குறித்த தகவல்களை மத்திய அரசு மருத்துவமனையான ESIC மருத்துவமனையின் உணவியல் நிபுணர் ரிது பூரி அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

தயிர் ஸ்மூத்தி

low bp curd smoothie

கோடையில் குறைந்த இரத்த அழுத்தத்தை சமாளிக்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இந்த ஸ்மூத்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

  • தயிர் - 1 கப்
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • வறுத்த சீரகம் - ¼ டீஸ்பூன்
  • ஆளி விதைகள் - 1 டீஸ்பூன்
  • புதினா - சிரிதளவு
  • தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஆளி விதைகளை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
  • இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் தயிருடன் உப்பு, வறுத்த சீரகம் மற்றும் ஆளி விதை சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • இதனுடன் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

காஃபி மற்றும் பீனட் பட்டர் ஸ்மூத்தி

low bp pea nut butter smoothie

இவ்விரண்டு பொருட்களையும் வைத்து சுவையான ஸ்மூத்தி தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

  • பால் - 1 கப்
  • காஃபி பவுடர் - 1.5 டீஸ்பூன்
  • பீனட் பட்டர் - 1 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை

  • ஒரு மிக்ஸர் ஜாரில் பால் காபி பவுடர், பீனட் பட்டர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • இந்த ரெசிபி செய்ய குளிர்விக்கப்பட்ட பால் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
  • இதனை ஒரு கிளாஸிற்கு மாற்றி உடனே பரிமாறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரையே இல்லாமல் ஹெல்த்தியான ஸ்வீட் செய்யலாம் வாங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]