herzindagi
ginger tea recipe with dry ginger

Ginger Tea for Weight Loss : ஈஸியா எடையை குறைக்கணுமா? இந்த மாதிரி இஞ்சி டீ போட்டு குடிங்க!

ஃபிரஷான இஞ்சி அல்லது சுக்கை கொண்டு இந்த டீயை தயாரிக்கலாம். குறைந்த கலோரி உள்ள இஞ்சி வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும்…
Editorial
Updated:- 2023-05-10, 09:47 IST

பெரும்பாலான உடல் நல பிரச்சனைகளுக்கு சமையலறையில் உள்ள பொருட்கள் மூலமாக தீர்வு காணலாம். அந்த வகையில் எடை இழப்புக்கு உதவக்கூடிய இஞ்சி டீயின் செய்முறையை இன்றைய பதிவில் பார்க்க போகிறோம்.

இஞ்சி டீ குடிப்பதுடன் சரியான உணவு முறையை கடைபிடித்து, தினசரி உடற்பயிற்சிகளை செய்து வந்தால் நிச்சயமாக நல்ல விளைவுகளை காண முடியும். ஃபிரெஷான இஞ்சி மற்றும் சுக்கு இரண்டிலும் இஞ்சி டீ செய்யலாம். இதன் செய்முறையை இப்போது விரிவாக பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இனி இந்த சாக்லேட் ஓட்ஸ் சாப்பிட்டு ஈஸியா எடையை குறைக்கலாம்!

ஃபிரெஷான இஞ்சி டீ

ginger tea for weight loss

தேவையான பொருட்கள்

  • இஞ்சி - 2 அங்குலம்
  • தண்ணீர் - 250 மில்லி
  • தேன் - 1 டீஸ்பூன்(விரும்பினால்)

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • துருவிய இஞ்சியை சேர்த்து குறைந்த தீயில் வைத்து, 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும்.
  • இதனை வடிகட்டி மிதமான சூட்டில் இருக்கும் பொழுது தேன் கலந்து குடிக்கலாம்.

சுக்கு டீ

sukku tea for weight loss

தேவையான பொருட்கள்

  • சுக்கு - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - 250 மில்லி
  • தேன் - 1 டீஸ்பூன்(விரும்பினால்)

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • இதனுடன் சுக்கு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு மட்டும் கொதிக்க விடவும்.
  • நீங்கள் விரும்பினால் இனிப்பு சுவைக்காக தேன் கலந்து குடிக்கலாம்.
  • இந்த இஞ்சி டீயுடன் சமச்சீரான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி வழக்கத்தை கடைபிடித்தால் உங்கள் உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: 100% வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையான பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]