herzindagi
chocolate oats recipe for weight loss

Overnight Soaked Oats : இனி இந்த சாக்லேட் ஓட்ஸ் சாப்பிட்டு ஈஸியா எடையை குறைக்கலாம்!

உடல் எடையை ஈஸியா குறைக்கனுமா? இந்த சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சாக்லேட் ஓட்ஸ் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க…
Editorial
Updated:- 2023-05-09, 09:29 IST

ஓட்ஸ் என்ற வார்த்தையை கேட்டாலே அலறுபவரா நீங்கள்? உடல் எடையை குறைக்க ஓட்ஸ் சாப்பிட சொல்றாங்க, ஆனா ஓட்ஸ் கஞ்சிய சாப்பிடறதுக்கு குண்டாகவே இருந்திடலாம்னு தோணும். தீவிரமாக உடல் எடையை குறைக்க நினைக்கும் ஒரு சிலர் மட்டும் வேறு வழி இல்லாமல் ஓட்ஸ் கஞ்சியை குடிப்பாங்க.

ஓட்ஸ் வைத்து என்னதான் தோசை, இட்லினு வித்தியாசமா செஞ்சாலும் நம்ம ஊரு இட்லி சாம்பார் சாப்பிட்டு பழகினவங்களுக்கு இதை இட்லியாக நம்ப வைக்குறது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா இன்னைக்கு நம்ம பார்க்க போற ரெசிபி நிச்சயமா ஓட்ஸ் கஞ்சி மாதிரி போரிங்கா இருக்காது. சாக்லேட் ஃபிளேவர்ல ஒரு சூப்பரான ஓட்ஸ் ரெசிபி தான் பார்க்க போறோம். வெள்ளை சர்க்கரை, பால் எதுவும் சேர்க்காத இந்த சாக்லேட் ஓட்ஸ் சாப்பிட்டு ஈஸியா உங்க உடல் எடையை குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நெல்லிக்காய் இருக்கா? 15 நிமிஷத்துல ஊறுகாய் ரெடி!

தேவையான பொருட்கள்

oats recipe for weight loss

  • ரோல்டு ஓட்ஸ் - ¼ கப்
  • பாதாம் 7-8
  • தண்ணீர் - 1 கப்
  • வாழைப்பழம் - 1
  • இலவங்கப்பட்டை பொடி - ¼ டீஸ்பூன்
  • வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
  • சியா விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
  • சூரிய காந்தி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
  • கொக்கோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

overnight soaked oats

  • முதலில் ஓட்ஸை 10 நிமிஷத்துக்கு ஊற வெச்சுக்கோங்க. ஓட்ஸ் சாப்பிடும் போது அஜீரணம், வாயு, உப்புசம் மாதிரி பிரச்சனைகள் இருந்தா குறைந்தது அரை மணி நேரமாவது ஓட்ஸை ஊற வெச்சுக்கோங்க.
  • அடுத்து ஊற வெச்ச தண்ணீரை ஊத்திட்டு ஓட்ஸை மட்டும் வடிச்சுக்கோங்க.
  • ஊற வெச்ச பாதாமோட தோலை உறிச்சிட்டு ஒரு மிக்சர் ஜாரில சேர்த்துக்கோங்க. இது கூடவே 1/4 கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து பாதாமை நல்லா அரைச்சு தனியா வெச்சுக்கோங்க.
  • அடுத்ததா ஒரு பாத்திரத்தில நறுக்கிய வாழைப்பழத்தை சேர்த்து, மத்து அல்லது ஃபோர்க் பயன்படுத்தி நல்லா மசிச்சுக்கோங்க.
  • மசித்த வாழைப்பழத்து கூட 1 டீஸ்பூன் பொடித்த வெல்லம், ¼ டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி சேர்த்து கலக்குங்க.
  • உங்களுக்குப் பிடிக்கும்னா வாசனைக்காக வெண்ணிலா எசன்ஸ் இல்ல ஏலக்காய் பொடியும் சேர்க்கலாம்.
  • எல்லாத்தையும் நல்லா கலந்துட்டு அரைச்சு வச்சிருக்க பாதாம் பாலையும் சேர்த்துக்கோங்க.
  • அடுத்து சியா விதைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் கொக்கோ பவுடர் சேருங்க. சூரியகாந்தி விதைகளுக்கு பதிலா பூசணி விதைகளையும் பயன்படுத்தலாம்.
  • இந்த சமயத்தில் சுவைத்து பார்த்து தேவைப்பட்டால் கூடுதல் இனிப்பு சேர்த்துக்கோங்க.
  • கடைசியா ஊறவைத்து ஓட்ஸ் சேர்த்து நன்கு கலந்துக்கோங்க. இதை மூடி நைட் ஃபிரிட்ஜில் வெச்சுடுங்க.
  • மறுநாள் காலைல இந்த சுவையான சாக்லேட் ஓட்ஸை டயட்னு சொல்லிட்டு ஜாலியா தனியா சாப்பிடலாம். என்ஜாய் பண்ணுங்க! ஜாலியா ஓட்ஸ் சாப்பிட்டு வெயிட் லாஸ் பண்ணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: 100% வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையான பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]