herzindagi
quick achu murukku recipe

Wheat Flour Achu Murukku : வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஒரு ஹெல்த்தியான அச்சு முறுக்கு ரெசிபி!

வீட்டில் உள்ள கோதுமை மாவு, அரிசிமாவு, வெல்லம் போன்ற ஆரோக்கியமான பொருட்களை சேர்த்து சமைத்து, இந்த பாரம்பரிய இனிப்பை ஆரோக்கியமானதாகவும் மாற்றிடுவோம்…
Editorial
Updated:- 2023-06-02, 13:43 IST

சிறு வயது ஞாபகங்களை நினைவிற்கு கொண்டு வரும் விஷங்களில் உணவும் ஒன்று. தீபாவளி, கிறிஸ்துமஸ் எனப் பெருமாபாலான பண்டிகை நாட்களில் செய்யப்படும் ஒரு பிரபலமான இனிப்பு ரெசிபியை இன்றைய பதிவில் பார்க்கபோகிறோம். மிதமான இனிப்பு சுவையில் திகட்டாத சுவை தரும் ஒரு பாரம்பரிய இனிப்பு இது.

லேசான இனிப்பு சுவையை விரும்புபவர்களுக்கு இந்த அச்சு முறுக்கு நிச்சயம் பிடிக்கும். அதிலும் அச்சு முறுக்கை உடையாமல் ஹார்ட் வடிவில் கடித்து சாப்பிடுவது ஒரு தனி சந்தோஷம். வழக்கமாக அச்சு முறுக்கு செய்வதற்கு மைதா, முட்டை மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இவை எதுவும் சேர்க்காமல் அச்சு முறுக்கு செய்ய முடியுமா என்ன? நிச்சயமாக முடியும். கோதுமை மாவை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஹெல்த்தியான அச்சு முறுக்கு ரெசிபியை இன்றைய பதிவில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க உதவும் ABC ஜூஸ்

தேவையான பொருட்கள்

wheat flour achu murukku

  • கோதுமை மாவு - 1 கப்
  • அரிசி மாவு - 1/2 கப்
  • நாட்டு சர்க்கரை - ¼ கப்
  • கருப்பு எள்ளு - 1 டீஸ்பூன்
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
  • ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்

செய்முறை

achu murukku recipe with wheat

  • ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் கோதுமை மாவை அளந்து எடுத்துக்கொள்ளவும்.
  • இதனுடன் ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை, உப்பு மற்றும் எள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • நாட்டு சர்க்கரைக்கு பதிலாக வெள்ளை சர்க்கரையை பயன்படுத்த விரும்புபவர்கள், சர்க்கரை மற்றும் ஏலக்காய் ஒன்றாக பொடித்து பயன்படுத்தலாம்.
  • தயாராக வைத்துள்ள மாவு கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். நீங்கள் விரும்பினால் தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பாலையும் பயன்படுத்தலாம்.
  • இப்போது கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • எண்ணெய் சூடான பிறகு அச்சு முறுக்கின் மோல்டை சிறிது நேரம் எண்ணெயில் வைக்கவும்.
  • சூடாக இருக்கும் மோல்டை அச்சு முறுக்கு மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
  • இருபுறமும் வெந்து பொன்னிறம் ஆகும் வரை வேக விடவும்.
  • இதே முறையில் மோல்டை சூடாக்கி மீதம் உள்ள மாவில் அச்சு முறுக்குகளை தயார் செய்யவும்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தரும் சாலட் ரெசிபி

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]