குழந்தைகள் விரும்பியதை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இருப்பது இயல்பான ஒன்று. அதற்காக கிடைத்த கண்களைக் கவரக்கூடிய அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொடுப்பது என்பது தவறான செயல். இது குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு அவர்களின் உடல் நலத்திற்கும் கேடு விளைவிப்பதாக அமையும். இவற்றையெல்லாம் தடுக்க வேண்டும் என்றால் சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளைக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். இந்த வரிசையில் இன்றைக்கு மக்காச்சோள வடையை குழந்தைகளுக்குக் கொடுக்கவும். இதை முயற்சி செய்யவில்லையென்றால் உங்களுக்கான ரெசிபி டிப்ஸ் இங்கே.
பள்ளி முடிந்தும் வீடு திரும்பும் குழந்தைகளுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கும் அம்மாக்கள் பொட்டாசியம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்த மக்காச்சோளத்தை வைத்து வடை செய்துக் கொடுக்கவும். இதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன? எப்படி செய்ய வேண்டும்? என்பது குறித்த விபரம்.
மேலும் படிக்க: கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம், மொறுமொறு பொரி உருண்டை ரெசிபி
மேலும் படிக்க: பலாக்கொட்டையில் மில்க் ஷேக்: சிம்பிள் ரெசிபி மேக்கிங் டிப்ஸ்கள்
இதையடுத்து வழக்கம் போல பருப்பு வடைக்கு எப்படி தட்டி போடுவோமோ? அந்தளவிற்கு எண்ணெய்யை சூடாக்கி அதில் தட்டி போட்டு எடுத்தால் போதும் சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த மக்காச்சோள வடை ரெடி. இதற்கு தக்காளி சட்னி, மல்லி, தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டு பாருங்கள். நிச்சயம் சுவை வேற லெவலில் இருக்கும். இனி குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ரெசிபிகள் செய்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த வடையை ட்ரை பண்ணிப்பாருங்கள்.
மேலும் படிக்க: சர்க்கரை தேவையில்லை, சுவையான பேரீச்சம்பழ ஓட்ஸ் லட்டு செய்வது எப்படி? ரெசிபி இதோ
மக்காச்சோளத்தில் பொட்டாசியம் போன்ற தாதுக்கள், வைட்டமின் பி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, தயாமின் மற்றும் நியாசின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு நாள் முழுவதும் உங்களுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
Image credit - Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]