herzindagi
maharashtrian varan bhat recipe

Varan Bhat Recipe: மஹாராஷ்டிரா ஸ்பெஷல் வரன் பாத் செய்முறை

உடல்நிலை சரியில்லாத நேரத்தில் வரன் பாத் செய்து சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக உணர்வீர்கள்…
Editorial
Updated:- 2024-02-07, 19:41 IST

நாம் உணவு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களின் ஊட்டச்சத்துகள் சமைத்த பிறகும் அப்படியே தங்கிட ஒரு சமையல் முறை உள்ளது. இதை One pot Cooking என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதாவது சமைக்கும் போது உணவின் ஊட்டசத்துகள்   அப்படியே தங்கும், அதே நேரம் பாத்திரம் கழுவுவதில் சிரமமும் இருக்காது. அப்படியான உணவு செய்முறையை நாம் பார்க்கப் போகிறோம்.

கர்நாடகாவில் பிஸிபேளா பாத் எந்த அளவிற்கு பிரபலமோ அதே போல மஹாராஷ்டிராவில் துவரம் பருப்பு பயன்படுத்தி செய்யப்படும் வரன் பாத் மிகவும் பிரபலமாகும். மஹாராஷ்ராவில் நடைபெறும் எந்த கொண்டாட்டாமாக இருந்தாலும் அனைவரது வீட்டிலும் வரன் பாத் சமைக்கப்படும். கொண்டாட்டங்கள் மட்டுமல்ல வாரத்திற்கு இருமுறை மதிய உணவாக வரன் பாத் இருக்கும். இதில் நிறைய மாறுபாடுகளும் உள்ளன.

மஹாராஷ்டிராவில் துவரம் பருப்புடன் பாஸ்மதி அரிசி சேர்த்து இதை சமைப்பார்கள். கடவுளுக்கு படைப்பதற்கும் இதைத் தயாரிப்பார்கள். ஆனால் அப்போது மட்டும் வெங்காயம், பூண்டு போட மாட்டார்கள். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் சாப்பிட்டாலும் எளிதில் செரிமானம் ஆக கூடிய ரெசிபியாகும்.

varan bhat ingredients

வாரன் பாத் செய்யத் தேவையானவை

  • துவரம் பருப்பு
  • பாஸ்மதி அரிசி
  • நெய்
  • வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • தேங்காய்
  • கொத்தமல்லி
  • தண்ணீர்
  • குண்டு மிளகாய்
  • சீரகம்
  • பூண்டு
  • தக்காளி
  • மஞ்சள் தூள்
  • பச்சை மிளகாய்
  • உப்பு
  • எலுமிச்சை பழம்

மேலும் படிங்க வீட்டிலேயே எளிதாக பிஸிபேளாபாத் செய்யலாம்

கவனம் கொள்க

அரை கிலோ பாஸ்மதி அரிசியை குக்கரில் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும். வரன் பாத் கொதிக்க விடும் போது வேக வைத்த பாஸ்மதி அரிசியை சேர்க்க வேண்டியிருக்கும். அதே போல 100 கிராம் துவரம் பருப்பை குக்கரில் ஐந்து விசிலுக்கு வைத்து வேக வைக்கவும்.

மிக்ஸியில் நான்கு பச்சை மிளகாய், ஒரு பெரிய சைஸ் வெங்காயம், 50 கிராம் துருவிய தேங்காய், அரை கட்டு கொத்தமல்லி சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைக்கவும்

வரன் பாத் செய்முறை

  • கடாயில் ஆறு ஸ்பூன் நெய் ஊற்றி அது சூடான பிறகு ஐந்து காய்ந்த குண்டு மிளகாய் போடவும்.
  • இதனுடன் மூன்று ஸ்பூன் சீரகம், 15 பூண்டு போட்டு வறுக்கவும்.
  • பூண்டின் நிறம் மாறியவுடன் அரைத்த பேஸ்ட்டை கடாயில் சேர்க்கவும். அதனுடன் இரண்டு மீடியம் சைஸ் தக்காளியை நறுக்கி போடவும்.
  • இதன் பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு போட்டு மிக்ஸ் செய்து 150 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றவும்.
  • வரன் பாத் பேஸ்ட் நன்றாகக் கொதித்து பச்சை வாடை போன பிறகு வேக வைத்த துவரம் பருப்பை சேர்க்கவும்.
  • இதன் பிறகு வேக வைத்த பாஸ்மதி அரிசிய சேர்க்கவும். பாஸ்மதி அரிசியில் மசாலா நன்றாக இறங்கிய பிறகு இரண்டு எலுமிச்சை பழத்தின் ஜூஸ்,  இரண்டு ஸ்பூன் நெய், கொத்தமல்லி போட்டு அடுப்பை ஆஃப் செய்துவிடுங்கள்.
  • 15 நிமிடத்திற்கு பிறகு பரிமாறுங்கள்.

மேலும் படிங்க ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு செய்முறை

சுருக்கமாக வரன் பாத் தயாரிப்பை நம்ம ஊர் பருப்பு சாதம் என்று சொல்லலாம்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]