herzindagi
andhra style moong dal dosa

Pesarattu Recipe : ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு செய்முறை

புரதம் நிறைந்த உணவை சாப்பிட விருப்பமா ? அதற்கு ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு சிறந்த தேர்வாகும். 
Editorial
Updated:- 2024-02-06, 18:16 IST

ஊட்டச்சத்து நிறைந்த உணவு செய்முறையில் நாம் அடுத்த பார்க்கப் போவது பெசரட்டு. தென் இந்திய மாநிலமான ஆந்திராவில் இது மிகவும் பிரபலமானது. ஆந்திரா ஸ்டைலிலேயே இதை எப்படி செய்வது என பார்க்கலாம். பெசரட்டு என்பது பச்சை பயிறை வைத்து செய்யக் கூடிய ஒரு தோசையாகும். இதன் செய்முறையில் முழுவதுமே பச்சை பயிறு மட்டுமே இருக்கும். பெசரட்டு செய்முறை மிகவும் எளிதானது என்பதால் அதில் உப்புமாவை திணிக்க போகிறோம். இது கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

pesarattu recipe

பெசரட்டு செய்யத் தேவையானவை 

  • பச்சை பயிறு 
  • தண்ணீர்
  • உப்பு 
  • பெருங்காயம் 
  • சீரகம் 
  • பச்சை மிளகாய் 
  • மஞ்சள் தூள்

கவனம் கொள்க 

200 கிராம் அளவிற்கு பச்சை பயிறை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து  மறுநாள் அதை வடிகட்டி விடுங்கள். பச்சை பயிறு புரதம் நிறைந்த பயிறு ஆகும்.

மேலும் படிங்க ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயிறு தோசை செய்முறை

பெசரட்டு செய்முறை

  • ஊறவைத்த பச்சை பயிறை மிக்ஸியில் போட்டு வடை மாவு போல அரைக்கவும். அதன் பிறகு அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு, அரை டீஸ்பூன் பெருங்காயம், ஒரு டீஸ்பூன் சீரகம், இரண்டு பச்சை மிளகாய்களை பொடிதாக நறுக்கி போடவும். 
  • அதேபோல தேவையான அளவு இஞ்சியை பொடிதாக நறுக்கி சேர்க்கவும்.
  • தற்போது தண்ணீர் சேர்த்து தோசை ஊற்றும் அளவிற்கு பெசரட்டு மாவை மாற்றவும். மாவுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேருங்கள்.
  • அடுத்ததாக ஸ்டப்ஃபிங் செய்வதற்கு உப்புமா தயாரிக்கலாம்.
  • கடாயில் பத்து ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு இரண்டு குண்டு மிளகாய், ஒரு டீஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுந்து, அரை ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்க்கவும்
  • உளுந்து, கடலைப் பருப்பு பொரிந்தவுடன் முந்திரி, கறிவேப்பிலை, ஒரு மீடியம் சைஸ் வெங்காயம், ஒரு டீஸ்பூன் அளவிற்கு பச்சை மிளகாய், கொஞ்சம் இஞ்சி சேர்க்கவும் 
  • அனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்து வதக்கிய பிறகு 150 கிராம் ரவை போடவும். ஐந்து நிமிடத்திற்கு வாட்டிய பிறகு கொதிக்க வைத்த தண்ணீயை ரவை மீது ஊற்றி மூடிவிடுங்கள்.
  • மூன்று நிமிடங்கள் கழித்து மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி அடுப்பை ஆப் செய்யவும்
  • தற்போது தோசைக்கல்-ல் பெசரட்டு மாவு ஊற்றி நெய் பயன்படுத்தி தோசை போல சுடவும்.
  • ஒரு புறம் மட்டும் வேகவைத்து எடுங்கள். அதன் மீது கொஞ்சம் உப்புமாவை பன் ஜாம் போல தடவி இஞ்சி சட்னியுடன் தொட்டு சாப்பிடுங்கள் அற்புதமாக இருக்கும்.
  • பெசரட்டு போலவே ஆந்திரா ஸ்டைலில் அல்லம் பச்சடி எனும் இஞ்சி சட்னியை தயாரித்து சாப்பிடவும்.

மேலும் படிங்க கர்நாடக ஸ்பெஷல் அக்கி ரொட்டி! ஆரோக்கியமான காலை உணவு

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]