30 வயதை கடந்த பெண்கள் குழந்தை பெற்றெடுக்க நினைத்தால் இந்த பரிசோதனை அவசியம்

திருமணம் நடந்த முதல் 3-4 வருடங்களுக்கு பெரும்பாலான தம்பதிகள் குழந்தை பெற்றிட திட்டமிடுவதில்லை. 30 வயதை கடந்துவிட்ட பெண்கள் குழந்தை பெற்றெடுக்க திட்டமிட்டால் அதற்கு ஏஎம்எச் டெஸ்ட் செய்வது அவசியம். இந்த பரிசோதனை பெண்களின் கருப்பையில் கருமுட்டை எண்ணிக்கை ? கருமுட்டையின்  தரத்தையும் கண்டறிய உதவும். இந்த பரிசோதனை செய்த பிறகு குழந்தைக்கான திட்டமிடல் பற்றி மருத்துவர் உரிய ஆலோசனை அளிப்பார்.
image

திருமணம் நடந்த ஒரு மாதத்திற்குள்ளே உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து எப்போது நல்ல செய்தி சொல்லப் போகிறீர்கள் என்ற தொல்லை கேள்வி அடிக்கடி எழும். குழந்தைபேறு தனிப்பட்ட விஷயம் என புரிதல் இன்றி தொடுக்கப்படும் கேள்விகளால் தேவையற்ற அழுத்தத்தை தம்பதிகள் உணர்வர். குழந்தை பெற்றெடுக்க உடனடி திட்டமிடல் இல்லாத நேரத்தில் இத்தகைய கேள்விகள் மனம் வருந்தச் செய்யும். அதே நேரத்தில் 30 வயதை கடந்த பெண்கள் குழந்தை பெற திட்டமிட்டால் அது எளிதாக இருக்காது. குழந்தை பெற்றெடுக்க விரும்பினால் குறிப்பாக 30 வயதை கடந்த பெண்கள் ஏஎம்எச் பரிசோதனை செய்வது நல்லது. இந்த பரிசோதனைக்கு உங்களுடைய உடல் குழந்தை பெற்றெடுக்க தயாராக உள்ளதா ? என்பதை கண்டறிய உதவும். ஏஎம்எச் டெஸ்ட் என்றால் என்ன ? இதன் அவசியம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

fertility testing for women

ஏஎம்எச் பரிசோதனை என்றால் என்ன ?

ஆங்கிலத்தில் இதற்கு Anti mullerian hormone என அர்த்தம். இது பெண்களின் கருப்பையில் உற்பத்தியாகும் ஹார்மோன் ஆகும். இதில் வளர்ச்சி அடையாத கருமுட்டைகள் இருக்கும். கருத்தரித்தல் வாய்ப்பை இரத்தத்தில் உள்ள ஏஎம்எச் அளவை வைத்து மருத்துவர்கள் கண்டுபிடிக்கின்றனர். திருமணம் ஆகி 30 வயதை கடந்திருந்தால் இந்த ஏஎம்எச் பரிசோதனை செய்யவும். இது கருமுட்டைகளின் தரத்தை கண்டறிய உதவி எப்போது குழந்தைபேறு திட்டமிட உதவும்.

ஏஎம்எச் பரிசோதனை எப்போது ?

  • முப்பது வயதை கடந்த பெண்கள் குழந்தை பெற்றெடுக்க நினைத்தால் ஏஎம்எச் பரிசோதனை அவசியம்.
  • கருத்தரிக்க நினைத்து முன்னேற்றம் இல்லாத பட்சத்தில் பரிசோதனை செய்யலாம்.
  • பிசிஓஎஸ், பிசிஓடி, ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை இருந்தால் பரிசோதனை செய்யுங்கள்.
  • கருமுட்டையை பாதுகாக்க விரும்பும் பெண்களும் இந்த பரிசோதனை செய்யலாம்.

ஏஎம்எச் பரிசோதனை

இந்த பரிசோதனைக்கு உடலில் இருந்து இரத்தம் எடுக்கப்படும். இதற்கு உடல் சர்க்கரை அளவை கண்டறிவது போல் சாப்பிடாமல் இருக்க அவசியமில்லை. மாதவிடாய் நாட்களிலும் கூட இந்த பரிசோதனை செய்யலாம்.

ஏஎம்எச் பரிசோதனை சொல்வது என்ன ?

ஏஎம்எச் பரிசோதனை கருப்பையில் கருமுட்டை எண்ணிக்கையை கண்டுபிடிக்க உதவும்.

  • 1.0-3.0 ng/ml - கருப்பையில் கருமுட்டை அதிகம்
  • 0.5-1.0 ng/ml - கருமுட்டை குறைவு
  • 0.3 ng/ml குறைவு - மிக குறைவான எண்ணிக்கையில் கருமுட்டை இருப்பதாக அர்த்தம். கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவே
  • 3.5 ng/ml மேல் - அதிகம் முட்டை இருப்பதாக அர்த்தம். ஆனால் பிசிஓஎஸ் பிரச்னை இருக்கலாம்.

ஏஎம்எச் குறைந்தால் குழந்தை பெற்றெடுக்க முடியாதா ?

ஏஎம்எச் பரிசோதனையில் கருமுட்டை அளவு குறைவாக இருந்தாலும் நீங்கள் குழந்தை பெற்றெடுக்க முடியும். இந்த பரிசோதனை கருமுட்டை தரத்தையும், கருத்தரித்தலின் வாய்ப்பை உறுதி செய்யும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP