பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் மகளிர் தின கொண்டாட்டத்திற்கு திட்டமிட்டு இருந்தால் இந்த கட்டுரையில் பகிரப்படும் கொண்டாட்ட யோசனைகளை பயன்படுத்தி மகளிர் தினத்தை அனைத்து பெண்களுக்கும் மறக்கமுடியாததாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுங்கள்.
ஆண் ஆதிக்கம் நிறைந்த இவ்வுலகில் ஒரு நிறுவனத்தின் பெண் தலைவரை சிறப்பு விருந்தினராக அழைத்து கடும் சவால்களுக்கு மத்தியில் அவர் எப்படி வேலை செய்கிறார் என்பதைப் பற்றி பேச வைக்கவும்.
உலகளவில் பெண் சாதனையாளர்களைப் பற்றிய ஆவணப்படங்களை அலுவலகத்தில் திரையிடுங்கள். பெண்களுக்கு ஊக்கமளிக்கும் TED டாக்ஸும் இடம்பெறட்டும்.
கலைக்கூடம் ஒன்றை உருவாக்கி மகளிர் தினம் தொடர்பாக பெண் ஊழியர்களை வரையச் சொல்லுங்கள்.
பெண்களை குறிக்கும் பிங்க் நிறத்தில் அலுவலகத்தை பலூன்கள், பேனர்களால் அலங்கரிக்கவும். இதற்கான பொறுப்புகளை பெண் ஊழியர்களிடம் ஒப்படைத்து அவர்களை சிறு குழுக்களாக பிரித்து பணி செய்ய அறிவுறுத்தவும். சாதனைப் பெண்களின் சுவரொட்டியும் இதில் இடம்பெறட்டும்.
அலுவலகத்தில் உள்ள பெண் ஊழியர்களை இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் அழகான ஆடை அணியுமாறு அறிவுறுத்தி அனைத்துப் பெண்களிடமும் ஒற்றுமையைக் நிரூபிக்கவும்.
அலுவலகத்தில் உள்ள பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும் பூச்செண்டு, வாழ்த்து அட்டை மற்றும் சாக்லேட் , வவுச்சர்களை பரிசாக அளிக்கவும்.
டீமில் உள்ள அனைத்து பெண்களுக்கும் டீம் அவுட்டிங் ஏற்பாடு செய்யுங்கள்.
ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை பற்றிய வழிகாட்டுதலுடன் கூடிய சுகாதார ஆலோசனை அமர்வு நடத்தி பெண்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை பற்றி எடுத்துரைக்கவும்.
மேலும் படிங்க பெண்மையை போற்றும் மகளிர் தின சிறப்புரை
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பேனா மற்றும் பேப்பர் வழங்கவும். தங்களைப் பற்றிய இரண்டு மூன்று உண்மைகளை பேப்பரில் எழுதச் சொல்லுங்கள். எல்லா பெண்களிடமிருந்தும் காகிதங்களை சேகரித்து கிண்ணத்தில் வைக்கவும்.
ஒரு பெண்ணை அழைத்து கிண்ணத்திலிருந்து ஒரு பேப்பரை எடுக்கச் சொல்லுங்கள். அதில் இருக்கும் உண்மையை படித்து போது அதை எழுதியவர் யார் என்று யூகிக்க வேண்டும். பதில்களை யூகிக்கும் பெண்களின் புள்ளிகளைக் கண்காணிக்கவும். அதிக புள்ளிகளுடன் சரியான பதில்களை வழங்கும் பெண்ணை வெற்றி பெற்றவராக அறிவியுங்கள்.
திரைப்பட பாடல்களை கொண்டு புதிர் விளையாடுங்கள். இந்தப் பாடலைப் பாடியவர் யார்? இந்தப் பாடலில் கேமியோ ரோலில் வந்தவர் யார்? போன்ற கேள்விகளின் பட்டியலைத் தயாரிக்கவும். பெண்களை இரண்டு குழுக்களாகப் பிரிக்கவும். பாடல்களை வாசித்து கேள்விகளைக் கேளுங்கள். முடிவில் அதிக புள்ளிகளைப் பெற்ற குழு வெற்றி பெறுகிறது.
ஒரு பலூனில் வரைய ஒவ்வொரு பெண்ணுக்கும் பால்பாயிண்ட் பேனா மற்றும் பலூனைக் கொடுங்கள். விசில் அடித்து பெண்களை பலூன்களில் ஏதாவது வரையச் சொல்லுங்கள். பலூன் வெடிக்காமல் சிறந்த படத்தை வரைந்த பெண்ணை வெற்றியாளராக அறிவிக்கவும்.
மேலும் படிங்க தாய், தங்கை, தாரத்திடம் அன்பை வெளிப்படுத்தும் மகளிர் தின வாழ்த்து
பெண்களை ஜோடிகளாக பிரிக்கவும். ஒவ்வொரு ஜோடியிலும் ஒரு பெண்ணைக் கண்ணை மூடிக்கொண்டு மற்றொரு பெண்ணின் முகத்தில் மேக்கப் போடச் சொல்லுங்கள். கண்களை மூடிக்கொண்டு சிறந்த மேக்கப் போடும் ஜோடி வெற்றி பெறுகிறது. உங்கள் நிறுவனத்தில் உள்ள பெண்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்த அவர்களை பாட வைக்கலாம், நடனமாட வைக்கலாம்.
இத்தகைய கொண்டாடங்கள் மகளிர் தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்றிடும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]