பெண்மையை போற்றும் விதமாக மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உங்கள் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ, பணியிடத்திலோ மகளிர் தினத்தில் உரைக்கு திட்டமிடப்பட்டு இருந்தால் முக்கியமாக பேச வேண்டிய தலைப்புகளும், உரைகளும் இங்கே...
இங்கு கூடியிருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும், சக தோழிகள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள். இந்த ஆண்டு 49 வது சர்வதேச மகளிர் தினத்தை நாம் கொண்டாடும் வேளையில் பாலின சமத்துவத்தை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நம் முன் இருக்கும் சவால்களைப் பற்றி சிந்திப்பது அவசியம். இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை "பெண்களில் முதலீடு செய்யுங்கள் : முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்" என்பதை கருப்பொருளாக தீர்மானித்துள்ளது. பல ஆண்டுகளாக நாம் முன்னேற்றம் அடைந்து வரும் போதிலும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் இன்னும் பல்வேறு துறைகளில் முழுமையாக செயல்பட முடியாத அளவிற்கு பல்வேறு தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எனினும் பல பெண்கள் தடைகளை உடைத்து உத்வேகமாக செயல்பட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமின்றி தடைகளை உடைத்த பெண்கள் எதிர்கால சந்ததியினருக்கு முன்னோடியாக விளங்குகின்றனர். சர்வதேச மகளிர் தினம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல பெண்களுக்கு உரிய அதிகாரத்தை பெற்று தந்து பாலின சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான நினைவூட்டலாகும்.
அன்பான நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு வணக்கம், சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட நாம் அனைவரும் இங்கு கூடியுள்ளோம். இந்த நாளில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பைப் பாராட்ட சிறிது நேரம் ஒதுக்குவது முக்கியம். விஞ்ஞானிகள், புதிய தொழில்முனைவோர், கலை தொழில் என ஒவ்வொரு பிரிவிலும் பெண்கள் தடம்பதித்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்து வருகின்றனர். எனினும் நமது சாதனைகள் பெரும்பாலும் மறக்கடிக்கப்படுவதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். அபரிமிதமான திறமை இருந்தபோதிலும் பெண்கள் வரலாற்று ரீதியாகவே பாரபட்சங்களை சந்தித்துள்ளனர். இத்தகைய துன்பங்களை எதிர்கொண்டாலும் பெண்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். தடைகளைத் தகர்த்து தனித்து நிற்கும் எண்ணற்ற பெண்களிடமிருந்து உத்வேகம் பெற்று முன்னேறுவோம். நன்றி.
மேலும் படிங்க சர்வமும் நீயே சகலமும் நீயே… மகளிர் தினத்தில் பெண்மையை போற்றுவோம்!
மதிப்பிற்குரிய விருந்தினர்கள், சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம். சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட நாம் இங்கு கூடியுள்ள நேரத்தில் பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் நாம் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் நிறைய உள்ளன. நாம் 2024 ஆம் ஆண்டில் இருக்கிறோம். உலகம் மகத்தான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆனால் பெண்களின் உலகம் இன்னும் அப்படியே உள்ளது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் பெண்கள் அமைப்புரீதியான பாகுபாடு, வன்முறை ஆகியவற்றால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். சமநிலை இல்லாத ஊதியம் மற்றும் கல்வி பயில்வதற்கு மறுப்பு முதல் பாலின அடிப்படையிலான வன்முறை வரை பெண்கள் இன்னும் அடிப்படை உரிமைகளுக்காக போராடி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சவால்களைக் கண்டு நாம் சோர்ந்துவிடக் கூடாது. மாறாக இந்த மகளிர் தினத்தை பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தில் நமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கான நேரமாக கருதி நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவோம்.
மேலும் படிங்க தாய், தங்கை, தாரத்திடம் அன்பை வெளிப்படுத்தும் மகளிர் தின வாழ்த்து
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]