
மகளிர் தினம் என்பது சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பம் மட்டுமல்ல, 21 ஆம் நூற்றாண்டில் கூட அவர்களைத் தடுத்து நிறுத்தும் தடைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு சந்தர்ப்பமாகும். இந்த தினத்தில் தாய், தங்கை, தோழி, காதலி, பெண் உறவுகள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகளை பகிருங்கள். இந்த மகளிர் தினத்தில் பகிர வேண்டிய சில வாழ்த்துகள் இங்கே...

அன்பைக் அள்ளிக் கொடுக்கும் அன்னையாக... அறிவை அருளும் ஆசிரியையாக… அரவணைக்கும் சகோதரியாக... மனதோடு மனம் கலந்த மனைவியாக… பாசத்தை கொட்டும் பாட்டியாக... வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கும் அவளைப் போற்றுவோம்! இனிய மகளிர் தின வாழ்த்துகள்
மங்கையாய் பிறப்பதற்கே...மாதவம் செய்திடல் வேண்டுமம்மா! மகளிர் தின வாழ்த்துகள்
மாலையும் நகையும் கேட்கவில்லை பெண்; மதித்தல் கேட்கிறாள்... வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள்... ஆடம்பரம் அங்கீகாரம் ஆசைப்படவில்லை பெண்; நம்பிக்கை கேட்கிறாள் கொடுத்துப் பாருங்கள்... அவளே பாதுகாப்பாள் ஆண்களையும்... சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்
மகளாய் மகுடம் தரித்து... மருமகளாய் மறுவீடு புகுந்து... மனைவியாய் மன்னவன் கை கோர்த்து... மசக்கையாகி மறுபிறவி எடுத்து... மழலை மொழியில் மகிழ்ச்சி கண்டு… மங்காத அறிவொளியும் தந்து... மருமகனுக்கோ, மருமகளுக்கோ மற்றொரு தாயாக மனைக்காத்து... மற்றவர் நலம் காத்து... மண்ணில் படைக்கப்பட்ட மாமணிகளுக்கு, மாதருக்கு, மாவுலகம் காத்திட மாபெரும் சாதனைகள் படைத்திட மனதார வாழ்த்துகிறோம்...
மேலும் படிங்க தொட்டில் குழந்தை திட்டம் முதல் அம்மா ஸ்கூட்டர் வரை! பெண்கள் முன்னேற்றத்திற்கு ‘அம்மா’ செயல்படுத்திய மகத்தான திட்டங்கள்
தாய்மையின்றி தலைமுறை ஏது ? பெண்களின்றி பிரபஞ்சம் ஏது ? மகளிர் தினம் வாழ்த்துகள்
பெற்றோரை நினைவில் சுமந்து கணவனை இதயத்தில் சுமந்து குழந்தையை கருவில் சுமந்து குடும்ப பாரத்தை தலையில் சுமந்து இவை அனைத்தும் சுகமான சுமை என சிரித்துக்கொண்டே வாழ்பவன் தான் பெண்... அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்
அன்பால் அரவணைக்கும் அன்னை அவள்... தமயனுக்காய் தவிக்கும் தங்கை அவள்… மனதால் மயக்கும் மனைவி அவள்... கண்களால் கவரும் காதலி அவள்... குசும்பு செய்யும் மகள் அவள்... மகளிர் தின வாழ்த்துகள்
அத்தனையும் அடுத்தவர்களுக்காக விட்டுக் கொடுத்து அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் மங்கையர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்
பெண்களே! உங்களை மதிப்பவர்களுக்கு மலர்களாய் இருங்கள், உங்களை மிதிப்பவர்களுக்கு முள்ளாய் இருங்கள்... இனிய மகளிர் தின வாழ்த்துகள்
உன்னால் முடியாதென ஏதுமில்லை வலி தாங்கிடும் வலிமை நீ... பெண்ணென்ற பெருமை நீ... மகளிர் தின வாழ்த்துகள்
அன்னையாய் தங்கையாய் தோழியாய் மனைவியாய் மகளாய் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்
சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பகவிருட்சம் தான் பெண்கள்!
நாள்தோறும் தடைகளைத் தகர்த்து, அன்றாடம் சரித்திரம் படைக்கும் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள்
மேலும் படிங்க இந்திய கால்பந்து அணியில் ஜொலிக்கும் தமிழகத்தின் தங்க தாரகைகள்
இது போன்ற கட்டுரைகளுக்கு ஜெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]