உலகமெங்கும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பிகில் படத்தில் இருந்து மாதேர மாதேர பாடலை வாட்ஸ் அப்-ல் ஸ்டேட்டஸ் வைத்து பெண் தோழிகளுக்கு வாழ்த்து சொல்லலாம் என காத்திருக்கும் நபர்கள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டமா அல்லது போராட்டத்தின் நினைவுகூரலா என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சர்வதேச மகளிர் தினம் பெண்களின் சாதனைகள், போராட்டங்கள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான உரிமையை நினைவுகூரும் நாளாகும். அதே வேளையில் கலாச்சாரம், அரசியல் மற்றும் சமூகத்தில் பல்வேறு துறைகளில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.
2024 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் 'பெண்களில் முதலீடு செய்யுங்கள் : முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்' என்பதாகும். Inspire Inclusion மற்றொரு கருப்பொருளாகும். அதாவது சமூகத்தில் உள்ள அனைத்து அம்சங்களிலும் பெண்களுக்கு பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது.
மேலும் படிங்க பெண் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் “புதுமைப் பெண்” திட்டம்
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) கூற்றுப்படி வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொழிலாளர் இயக்கங்களின் செயல்பாடுகளில் இருந்து சர்வதேச மகளிர் தினம் தோன்றி இருக்கிறது. 1908 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த ஆடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் நினைவாக 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்காவில் முதல் தேசிய மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது பெண்கள் கடுமையான வேலை சூழலுக்கு எதிராக போராடினர்.
1945ல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவக் கொள்கையை உறுதிப்படுத்தும் முதல் சர்வதேச ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. பின்னர் மார்ச் 8, 1975 அதிகாரப்பூர்வமாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 1977ல் ஐநா பொதுச் சபையின் தீர்மானத்தை ஏற்று சர்வதேச மகளிர் தினம் ஒரு உலகளாவிய விடுமுறையாக மாறியது.
பெண்களின் கலாச்சார, அரசியல், சமூக மற்றும் பொருளாதார சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பாலினச் சார்பு மற்றும் பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து பாலின சமத்துவத்தை அடைவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இந்த நாள் அமைகிறது.
மேலும் படிங்க இந்திய கால்பந்து அணியில் ஜொலிக்கும் தமிழகத்தின் தங்க தாரகைகள்
சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமத்துவமின்மை, பாலின அடிப்படையிலான வன்முறை, கல்வி மற்றும் வரையறுக்கப்பட்ட பொருளாதார வாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மகளிர் தினம் சிறந்த அடித்தளமாகும். பாலின சமத்துவத்தை ஊக்குவித்து, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் தீர்வுகளை நோக்கிச் செயல்படுவதற்கும், ஏற்படுத்த வேண்டியை முன்னேற்ற பாதைகள் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கும் இது சரியான தருணமாகும்.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]