ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் நிச்சயம் பெண்ணின் பங்களிப்பு இருக்கும். நூற்றாண்டுகளாக சமூகத்தின் கட்டமைப்பில் பெரும் பங்காற்றும் பெண்களை நாம் வாழ்த்தி கொண்டாட தவறியிருக்கிறோம். உலகளவில் மார்ச் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படும் சர்வதேச மகளிர் தினம் பாலின பாகுபாடின்றி பெண்களை நடத்திட விழிப்புணர்வு ஏற்படுத்துக்கிறது. தாய், தங்கை, தோழி, மகள், காதலி, மனைவி என ஒவ்வொரு வடிவிலும் பெண் நம்மோடு பயணிக்கிறாள். சர்வதேச மகளிர் தினத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் பெண்ணை பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறோம். மார்ச் 8 மகளிர் தினத்தில் பெண்களுக்கு அனுப்ப வேண்டிய வாழ்த்து, கவிதை, குறுஞ்செய்தி இங்கு பகிரப்பட்டுள்ளது.
மகளிர் தின வாழ்த்து 2025
- தாய்மையின்றி தலைமுறை ஏது ? பெண்களின்றி பிரபஞ்சம் ஏது ? மகளிர் தின வாழ்த்துகள்
- அன்னையாய் தங்கையாய் தோழியாய் மனைவியாய் மகளாய் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்
- அன்பால் அரவணைக்கும் அன்னை அவள்... தமயனுக்காக தவிக்கும் தங்கை அவள்… மனதால் மயக்கும் மனைவி அவள்... கண்களால் கவரும் காதலி அவள்... குசும்புடன் பிறக்கும் மகள் அவள்... இனிய சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்
- மங்கையராய் பிறப்பதற்கே...மாதவம் செய்திடல் வேண்டுமம்மா! மகளிர் தின வாழ்த்துகள்
- நிபந்தனையற்ற அன்பையும் பாசத்தையும் பொழியும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்
- உங்களை மதிப்பவர்களுக்கு மலர்களாய் இருங்கள், உங்களை மிதிப்பவர்களுக்கு முள்ளாய் இருங்கள்... இனிய மகளிர் தின வாழ்த்துகள்
- பெற்றோரை நினைவில் சுமந்து கணவனை இதயத்தில் சுமந்து குழந்தையை கருவில் சுமந்து குடும்ப பாரத்தை தலையில் சுமந்து இவை அனைத்தும் சுகமான சுமை என சிரித்துக்கொண்டே வாழ்பவள் பெண்... அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்
- உன்னால் முடியாதென ஏதுமில்லை வலி தாங்கிடும் வலிமை நீ... பெண்ணென்ற பெருமை நீ... மகளிர் தின வாழ்த்துகள்
- அன்பை அள்ளிக் கொடுக்கும் அன்னையாக... அறிவை அருளும் ஆசிரியையாக… அரவணைக்கும் சகோதரியாக... மனதோடு மனம் கலந்த மனைவியாக… பாசத்தை கொட்டும் பாட்டியாக... வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கும் அவளைப் போற்றுவோம்! இனிய மகளிர் தின வாழ்த்துகள்
- தடைகளை தகர்த்தெறிந்து சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பகவிருட்சகமே பெண்கள்... இனிய மகளிர் தின வாழ்த்துகள்
- மாலையும் நகையும் கேட்கவில்லை பெண்; மதிப்பு கேட்கிறாள்... வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள்... ஆடம்பரத்திற்காக ஆசைப்படவில்லை பெண்; நம்பிக்கை கேட்கிறாள் கொடுத்துப் பாருங்கள்... ஆண்களையும் அவளே பாதுகாப்பாள்... சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்
- உலகில் தாய்மைக்கு ஈடு கொடுக்க எதுவுமில்லை அந்த வரனை பெற்ற பெண்மையை போற்றுவோம்... சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்
- நாள்தோறும் தடைகளைத் தகர்த்து, அன்றாடம் சரித்திரம் படைக்கும் பெண்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்
- மகளாய் மகுடம் தரித்து... மருமகளாய் மறுவீடு புகுந்து... மனைவியாய் மன்னவன் கை கோர்த்து... மசக்கையாகி மறுபிறவி எடுத்து... மழலை மொழியில் மகிழ்ச்சி கண்டு… மங்காத அறிவொளியும் தந்து... மருமகனுக்கோ, மருமகளுக்கோ மற்றொரு தாயாக மனைக்காத்து... மற்றவர் நலம் காத்து... மண்ணில் படைக்கப்பட்ட மாமணிகளுக்கு, மாதருக்கு மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துகள்...
மேலும் படிங்கமகளிர் தின சிறப்புரை : சமூகம் தழைத்தோங்க பெண்ணியம் பேசுவோம்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation