இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய் புலே 1831ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி, மகராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தின் நைகான் பகுதியில் பிறந்தவர். இவர் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல. பெண்களுக்கான உரிமைகளை பெற்று தந்து அவர்களுடைய வாழ்வு ஏற்றம் காண்பதற்காக சமூக சீர்திருத்த விஷயங்களில் கவனம் செலுத்தினார். சாவித்திரிபாய் புலே சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தார். இந்தியாவில் பெண்களுக்கான உரிமைகளை பெற்று தருவதில் முன்னோடியாகவும் சாவித்திரிபாய் புலே அறியப்படுகிறார்.
சாவித்திரிபாய் புலே
19ஆம் நூற்றாண்டில் கல்வி துறையில் ஆளுமைமிக்க நபராகவும் சாவித்திரிபாய் புலே விளங்கினார். கொடுங்கோல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கல்வி கற்பது மிகவும் கடினமாக தெரிந்த நிலையில் சாவித்திரிபாய் புலே பெண் கல்விக்காக அயராது உழைத்தார். இதன் காரணமாகவே இந்தியாவில் ஜனவரி 3ஆம் சாவித்திரிபாய் புலே ஜெயந்தி பெண் கல்வி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஜாதி பாகுபாடின்றி அனைத்து சமூக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் சாவித்திரிபாய் புலே பாடுபட்டார். 1848ல் ஜோதிராவ் புலே - சாவித்திரிபாய் புலே திருமணம் நடைபெற்றது. அப்போது அவருக்கு வயது 17. ஆசிரியராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் வாழ்ந்த ஜோதிராவ் புலே தனது மனைவியின் கல்விக்கு உதவினார். ஜோதிராவின் கற்றுக்கொடுத்த விஷயங்களும் அவருடைய அனுபவமும் சாவித்திரிபாயின் ஆசிரியராகவும் கனவு நிறைவேற உதவியது. அந்த ஆண்டே இருவரும் சேர்ந்து புனேவில் பெண்கள் பள்ளியை நிறுவினர். இதுவே இந்தியாவின் முதல் அங்கீகரிப்பட்ட பெண் பள்ளியாகும்.
ஜோதிராவ் புலே துணையோடு ஆரம்ப பள்ளியை முடித்த பிறகு நண்பர்களான யெஷவந்த், கேஷவ் சிவ்ராமுடன் உயர் கல்வி பயின்றார். மராத்தி மொழியில் அவர் எழுதிய பாடல்கள், கவிதைகளில் சமத்துவம், மனிதம், சுதந்திரம் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.
சாவித்திரிபாய் புலே ஜெயந்தி
சாவித்திரிபாய் புலே வாழ்க்கை வரலாறு ஒவ்வொரு பெண் ஆசிரியரையும் காலம் கடந்தும் ஊக்குவிக்கும். பெண் கல்விக்காக சாவித்திரிபாய் புலே எடுத்த முயற்சிகள் அளப்பரியதாகும். பெண்கள் கல்வி கற்றால் பாலின சமுத்துவம் ஏற்படும்; ஆண்களுக்கு இணையாக சிறந்த தலைவர்களாகவும் உருவெடுப்பார்கள் என சாவித்திரிபாய் புலே முழுமையாக நம்பினார். 1948ல் இருந்து 1951ற்குள் மூன்று பள்ளிகளை திறந்து 151 பெண்களை படிக்க வைத்தார். தனது வாழ்நாளில் நாடு முழுவதும் 17 பள்ளிகளை பெண்களுக்காக நிறுவினார்.
மேலும் படிங்கவிஜய் குறிப்பிட்ட அஞ்சலை அம்மாள் யார் ? “ தென் இந்தியாவின் ஜான்சி ராணி”
சமீபத்தில் தெலங்கானா அரசு சாவித்திரிபாயின் சேவைக்கு பெருமை சேர்த்தும் விதமாக அவருடைய பிறந்தநாள் பெண் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation