கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவரான அஞ்சலை அம்மாள் சுதந்திர போராட்ட தியாகி, சமூக செயல்பாட்டாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல்வாதியாக செயல்பட்டவர். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சுமார் ஏழரை ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தார். 1937 மற்றும் 1946ல் மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக பணியாற்றினார். 1921ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். அதே போல் உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போராட்டங்களையும் தமிழகத்தில் முன்னெடுத்தவர்.
கடலூரின் வேலுநாச்சியார் அஞ்சலை அம்மாள்
இவரது தைரியத்தை கண்டு வியந்த மகாத்மா காந்தி கடலூரின் வேலுநாச்சியார்என அஞ்சலை அம்மாளை குறிப்பிட்டார். காந்தி கடலூருக்கு வந்த போது கொடுங்கோல் பிரிட்டிஷ் அரசு இருவரது சந்திப்பை தடுத்தது. எனினும் இஸ்லாமிய பெண் போல் புர்கா அணிந்து காந்தியை சந்தித்தார். தனது 9 வயது பெண் குழந்தையையும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தினார். அந்த பெண் குழந்தைக்கு லீலாவதி என காந்தியால் பெயர் சூட்டப்பட்டது.
சிறையில் குழந்தை பிரசவித்த அஞ்சலை அம்மாள்
அஞ்சலை அம்மாள் தொடர்ந்து நான்கரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். அஞ்சலை அம்மாளின் கடைசி மகன் சிறையிலேயே பிறந்தார். இவரது வாழ்க்கை வரலாறு தமிழக எட்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அஞ்சலை அம்மாளை தொடர்ந்து அவருடைய குடும்பம் சுதந்திரத்திற்காக போராடியது.
அஞ்சலை அம்மாள் கைது
1930ல் சென்னையில் வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்த கடை முன் போராட்டம் நடத்தியதற்காக அஞ்சலை அம்மாளை கொடுங்கோல் பிரிட்டிஷ் அரசு கைது செய்தது. அந்த வழக்கு விசாரணையின் போது தான் செய்தது குற்றமில்லை எனவும் பிரிட்டிஷ் அதிகாரிகள் போராட்டக்காரர்களை கொடுமைப்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும் படிங்கவீரம் விளைந்த மதுரை மண்! சுதந்திர போராட்ட வீராங்கனை சொர்ணத்தம்மாளின் வரலாறு...
1931ல் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கூட்டத்தை தலைமையேற்று நடத்தினார். 1932ல் மற்றொரு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்காக வேலுர் சிறைக்கு அனுப்பபட்டார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட போது கர்ப்பிணியாக இருந்த அவர் ஜாமினில் வெளிவந்து குழந்தை பிறந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் சிறை சென்றார். 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மீண்டும் மெட்ராஜ் மாகாணத்தின் சட்டப்பேரவை உறுப்பினராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ல் பிப்ரவரி 20ஆம் தேதி மறைந்தார்.இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation