சுதந்திர போராட்டத்தை பற்றி பேசும் போது நமக்கு உடனடியாக காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி, பகத் சிங் போன்ற தலைவர்களின் பெயர்கள் மனதில் தோன்றும். ஜான்ஸி ராணியில் தொடங்கி சரோஜினி நாயுடு வரை சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் இருந்துள்ளது. தமிழகத்தில் இருந்து நாட்டின் சுதந்திரத்திற்காக பல பெண் தலைவர்கள் பிரிட்டிஷ் அரசுக்காக போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். அவர்களில் ஒருவர் தான் மெட்ராஜ் மாகாணத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள கடச்சனேந்தலை சேர்ந்த சொர்ணத்தம்மாள். இவர் தனது கணவர் சேஷ பாகவதரை பின்பற்றி நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தார். சேஷ பாகவதர் 1930ல் கள்ளு கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டதற்காக ஆறு மாதங்கள் சிறை தண்டனையும், வெளிநாட்டு ஆடைகளை விற்ற கடைகளுக்கு முன்பாக மறியல் செய்ததற்கு மூன்று வாரங்களும், தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதற்காக நான்கு மாதங்களும் சிறையில் அடைக்கப்பட்டார். 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற காரணத்திற்காக சொர்ணத்தம்மாள் ஆறு மாதம் வேலூர் ஜெயிலிலும், ஒரு மாதம் மதுரை சிறையிலும் அடைக்கப்பட்டார். சுதந்திரத்திற்காக தேசிய இயக்கங்களோடு சேர்ந்து போராடியவர்களை தொடர்ந்து பிரிட்டிஷ் அரசு கைது செய்து அடித்து துன்புறுத்தி கடுமையான தண்டனை வழங்கிய போதிலும் சொர்ணத்தம்மாள் பின்வாங்கவில்லை.
காந்தியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 1942ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி சொர்ணத்தம்மாள் சக சுதந்திர போராட்ட வீராங்கனையான லட்சுமி பாய் அம்மாளுடன் இணைந்து பேரணி ஒன்றை நடத்தினர். இதில் வெள்ளையனே வெளியேறு, இந்தியாவை விட்டு வெளியேறு போன்ற முழக்கங்களை எழுப்பினர். இதற்காக சொர்ணத்தமாளை பிரிட்டிஷ் அரசு கைது செய்து காவல் நிலையில் கொடூரமாக தாக்கியது. அப்போது ராட்சத அதிகாரியான தீச்செட்டி கோவிந்தன் எனும் விவஸ்வநாத நாயர் மன்னிப்பு கடிதம் அளிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் எனவும் இனி எந்த போராட்டத்திலும் பங்கேற்க மாட்டேன் என உறுதி அளிக்குமாறும் மிரட்டியுள்ளார். ஆனால் சொர்ணத்தம்மாள் பின்வாங்கவில்லை. இதையடுத்து கொடூர காவல் மிருகங்கள் அவரது ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி அழகர்கோவிலின் அருகே நடுராத்திரியில் விட்டனர்.
எனினும் திடமான இதயத்தோடு சொர்ணத்தம்மாள் நாட்டின் சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடினார். சொர்ணத்தம்மாள் மீண்டும் 1942ல் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியை போலவே காதி தயாரிக்கும் சுழலும் சக்கரத்தை பயன்படுத்த தெரிந்தவர். இவரது தியாகங்கள் நாட்டின் சுதந்திரத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்த வீர பெண்மணியை நினைவுகூருவோம்...
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation