
கேரளாவை சார்ந்த காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கன்ஹங்காட்டைச் சேர்ந்த ஜுவானா. தனது முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் மருத்துவ ஆணையம் நீட் தேர்விற்கு 25 வயது வரம்பை நீக்கியது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஜுவானா, திருமணத்திற்கு முன் விட்ட தனது மருத்துவ படிப்பை தனது குழந்தைகளின் உதவியுடன் மீண்டும் தொடங்கியுள்ளார்.
12ஆம் வகுப்பை முடித்த பிறகு கேரளா அரசு மருத்துவ நுழைவுத் தேர்வில் 3 முறை தேர்வு எழுது தோல்வி அடைந்துள்ளார். அதன் பின்னர், விலங்கியல் துறையில் BSc பட்டம் பெற்று மங்களூரில் மருத்துவ முதுகலைப் படிப்பில் சேர்ந்தார். பின்னர் அவர் தந்தையின் மறைவால் படிப்பை நிறுத்திவிட்டு சில மாதங்கள் கழித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஜுவானா நான்கு குழந்தைகளுக்கு தாயாகி இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டு இருந்தார். இருப்பினும், அவரது மருத்துவ கனவு மனதில் அழமாக படிந்துவிட்டது.
மேலும் படிக்க: 2026 ஆம் ஆண்டு இத்தனை நாள் அரசு விடுமுறையா? முழு விபரம் இங்கே!
ஜுவானாவின் கணவர் கே.பி. அப்துல்லா அரசு மருத்துவமனையில் காது மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். அவரது முத்த மகளும் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு இப்போது அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். மேலும் அவர்கள் மகன்கள் இருவரும் மருத்துவம் படித்து வருகின்றனர். இளைய மகள் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரது முழு குடும்பமும் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது.
குடும்ப வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்துவரும் ஜுவானாவின் கனவு மருத்துவராக வேண்டும் என்பது, இதனை புரிந்துகொண்டு அவரது குடும்பமும் அவரது மருத்துவ படிப்பிற்கு முழு துணையாக இருந்தனர். ஜுவானாவின் நீட் தேர்வுக்கு, வெளியில் எங்கு சென்றும் பயிற்சி பெறவில்லை, அவரது குடும்பம் முழுவதும் அவருக்கு துணையாக இருந்து பயிற்றுவித்துள்ளனர். அதன்பிறகு, பயிற்சி வகுப்பிற்குப் பதிலாக YouTube-யை பார்த்தும் படித்துள்ளார். அவரது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்து நீட் முதல் தேர்ச்சியிலே வெற்றிபெற்றுள்ளார்.

தற்பொழுது 47 வயதாகும் ஜுவானா தனது வீட்டு அருகில் இருக்கும் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது இந்த முயற்சி அனைத்து பெண்களுக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருக்கிறது. சாதிப்பதற்கும் படிப்பதற்கும் வயது தடையில்லை என்பது ஜுவானாவை பார்த்து கற்றுக்கொள்ளலாம்.
மேலும் படிக்க: உங்களை அறியாமல் மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்
இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், நிச்சயமாக அதைப் பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]