இளம் கன்று பயம் அறியாது என்பார்கள். இதற்கு தற்காலத்து உதாரணமாக லிஸிபிரியா கங்குஜம் என்ற 14 வயதான சிறுமியை குறிப்பிடலாம். மணிப்பூர் மாநிலத்தில் பிறந்த லிஸிபிரியா கங்குஜம் 2018 முதல் உலகை வலம் வந்தபடி உள்ளார். சுற்றுச்சூழல்பாதுகாப்பு, மாசுபாட்டால் ஏற்படும் இயற்கை சீரழிவு, குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து உலகின் எந்த மூளையிலும் கருத்தரங்கம், விழிப்புணர்வு கூட்டம் நடந்தாலும் அங்கு லிஸிபிரியா கங்குஜத்தை காண முடியும். ஐக்கிய நாடுகள் சபை, காப் மாநாடு ஆகியவற்றில் பங்கேற்று பேசியுள்ளார். குழந்தைப் பருவத்தில் தான் எதிர்கொண்ட இன்னல்களை வேறு யாரும் ஆனுபவிக்க கூடாது எனசுற்றுச்சூழல்ஆர்வலராக செயல்பட்டு வருகிறார்.
7 வயதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்
2018ல் டிட்டி புயல் இந்தியாவின் கடற்கரை பகுதிகளில் ருத்ரதாண்டவம் ஆடியது. டிட்டி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று. லிஸிபிரியாவின் குடும்பம் உட்பட 60 லட்சம் பேர் இயற்கை பேரிடரால் கடும் இன்னலுக்கு ஆளாகினர். பருவநிலை மாற்றமும் புயலுக்கு ஒரு காரணம் என்று உணர்ந்த லிஸிபிரியா வாழ்வாதாரம் பாதிக்காத பாதுகாப்பான சூழலை உருவாக்கிட விரும்பினார். அடுத்த ஆண்டே லிஸிபிரியா குடும்பத்தோடு டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவருக்கு கல்வி பயிலும் வாய்ப்பும் கிடைத்தது.
பதாகை ஏற்படுத்திய மாற்றம்
ஒற்றை பதாகையால் தாஜ்மஹால் பகுதியின் தூய்மையை இந்த சிறுமி மாற்றினார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? ஆம், ஒரு முறை உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு சென்றிருந்த லிஸிபிரியா கங்குஜம் மாசடைந்த யமுனை நதிக்கரையில் இருந்து தாஜ்மஹாலின் புகைப்படத்தை வெளியிட்டார். " உலக அதிசயமான தாஜ்மஹாலுக்கு பின்னே" என்ற பதாகையுடன் அவர் நின்று கொண்டிருந்த புகைப்படம் உலகளவில் வைரலானது.
யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தாஜ்மஹால் சுற்றுலாத் தலம் குப்பை கூடமாக காட்சியளித்தது. ஆண்டுதோறும் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் போட்டு செல்லும் பிளாஸ்டிக் பாட்டில், இதர குப்பைகள் காரணமாக தாஜ்மஹாலில் அழகு குறைவதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அக்ரா நகராட்சி நிர்வாகம் துரிதமான நடவடிக்கை எடுத்து தாஜ்மஹாலின் அருகே யமுனை நதிக்கரை பகுதியை சுத்தப்படுத்தியது. அதோடு நிறுத்திவிடாமல் இந்திய தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதி யுனெஸ்கா அங்கீகாரம் பெற்ற இந்திய புராதன சின்னங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
கேரளா வெள்ள நிவாரணம்
2018ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் பல பகுதிகள் மழை வெள்ள பாதிப்பால் தத்தளித்தன. அப்போது முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தான் சேமித்து வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை கொடுத்தார் லிஸிபிரியா கங்குஜம். இந்த செயலை பாராட்டி கேரள அரசு அவருக்கு சான்றிதழும் வழங்கியது. டெல்லியில் காற்று மாசுபாடு, வெள்ள பாதிப்பின் போது அரசுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவரித்தார்.சுற்றுச்சூழல்பாதுகாப்பு பற்றி பள்ளிக் கல்வியில் பாடம் இடம்பெற வேண்டும் என பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டங்கள் நடத்தியுள்ளார். இந்தியாவில் கல்வி பயிலும் ஒவ்வொரு குழந்தையும் ஆண்டுக்கு தலா 10 மரங்கள் வளர்க்க வேண்டும் என்பதே அவருடைய கோரிக்கை.
மேலும் படிங்கஉலகின் டாப் 7 பணக்கார பெண்கள் யார் தெரியுமா ? பட்டியலில் இந்திய பெண் உண்டா ?
தனது பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி உலக நாடுகளின் தலைவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பருவநிலை மாற்றத்திற்கு நடவடிக்கை எடுக்க வலுயுறுத்துகிறார். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் குழந்தை நல விருது உள்ளிட்ட பல விருதுகள் லிஸிபிரியாவின் செயல்களை பாராட்டி வழங்கப்பட்டுள்ளன.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation