கல்விக்கான உரிமை மறுக்கப்பட்டு, பாலின பாகுபாட்டால் நிராகரிக்கப்பட்டு, அதிகார வாய்ப்பு தடுக்கப்பட்டு நூற்றாண்டுகளாக பெண்கள் வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டனர். மன உறுதியோடு தொடர்ந்து போராடிய காரணத்தால் தடைகளை தகர்த்தெறிந்து சமூகத்தில் பெண்கள் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிக்கின்றனர். உலக நாடுகளில் பெண்களின் முன்னேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சர்வதேச மகளிர் தினம் ஆகும். இந்த கட்டுரையில் அலுவலகங்கள், பணி இடங்களில் எப்படியெல்லாம் மகளிர் தினத்தை கொண்டாடலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மகளிர் தின கொண்டாட்டம்
பரிசுகள் வழங்குதல்
பரிசு பெறுவதை யாரும் மறுக்கமாட்டார்கள். பரிசுகள் பெறுவதை பெண்களும் விரும்புவர். மகளிர் தினத்தன்று ஒவ்வொரு ரூ.1,000 முதல் ரூ.2000 மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கலாம். இதில் ஆபரணங்கள், அழகு சாதனப் பொருட்கள், தினசரி பயன்பாட்டு பொருட்கள் இடம்பெறட்டும். பெண்களுக்கு பிடித்தமான கைப்பை வழங்குவது சிறப்பு.
மகளிர் தின வாழ்த்து
அலுவலகத்தில் உடன் பணியாற்றும் ஒவ்வொரு பெண்ணிடமும் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துகளை பகிரவும். உங்களுடைய வாழ்த்துகள் அவர்களுக்கு விலை மதிப்பற்றவை. ஊக்கமளிக்கும் மகளிர் தின கவிதைகளை வாழ்த்து அட்டையில் எழுதிக் கொடுக்கவும்.
மகளிர் தினத்தில் விடுப்பு
அலுவலக பணிக்கு மட்டும் விடுப்பு அளித்து நிர்வாகம் சார்பாக அவர்களை உணவகங்கள், ரிசார்ட்களுக்கு அழைத்து சென்று மகளிர் தினத்தை கொண்டாடவும்.
ஊதா நிற உடை
சர்வவதேச மகளிர் தினத்தின் அதிகாரப்பூர்வ நிறமாக ஊதா அறியப்படுகிறது. ஊதா நிறம் நீதியை குறிக்கிறது. அலுவலகத்தில் அனைத்து பெண்களையும் ஊதா நிறத்தில் உடைகள் அணிந்து வரச் சொல்லி கூட்டு புகைப்படம் எடுக்கவும்.
பாராட்டு அட்டை
அலுகலத்தில் பணியாற்றும் ஒவ்வொரு பெண்ணின் பங்களிப்பையும் வாழ்த்து அட்டையில் குறிப்பிட்டு அவர்களை பாராட்டுங்கள். அவர்களுடைய அயராத பணிக்கு இது சான்றாக அமையலாம்.
சிறப்பு குறும்படம்
பெண்கள் முன்னேற்றத்திற்கு காரணமான முன்னோடிகள் குறித்த குறும்படத்தை ஒளிபரப்பி மகளிர் தினத்தின் சிறப்பை உணர்த்திடுங்கள். அதே போல அலுவலகத்தின் கடை நிலை ஊழியர் முதல் தலைமை பொறுப்பில் இருக்கும் பெண் வரை அனைவரையும் உள்ளடக்கிய சிறப்பு குறும்படத்தை முன்கூட்டியே உருவாக்கி மகளிர் தினத்தின்று ஒளிபரப்புங்கள்.
மேலும் படிங்க Women's Day 2025 : ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டிய மகளிர் தின வரலாறு
மகளிர் தின போட்டிகள்
- மகளிர் தினம் தொடர்பாக கேள்வி பதில் போட்டி நடத்தி சரியாக பதில் அளிக்கும் நபர்களுக்கு பரிசு கொடுங்கள்.
- ஒவ்வொரு பெண் ஊழியரையும் முன்னே அழைத்து தங்களது வாழ்க்கையின் கடினமான பகுதி அல்லது அலுவலக பணி குறித்து இரண்டு நிமிடம் பேசும் வாய்ப்பை அளிக்கவும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation