Propose Day 2025: உணர்ச்சிமிகு கவிதைகள் மூலம் காதலை சொல்ல உங்களுக்கான சில யோசனைகள்

பெண்களையும், ஆண்களையும் சட்டென்று கவர வேண்டும் என்றால் அவர்களைப் பற்றிய கவிதைகள் தான் உங்களுக்குப் பேருதவியாக இருக்கும். காதல் உறவில் காதலை வெளிப்படுத்தும் ப்ரோபேஸ் தினத்தில்  சில கவிதைகளை உங்களுடன் பகிர்கிறோம்.
image

உலகெங்கிலும் உள்ள காதலர்கள் தங்களுக்கானவர்களைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களிடம் காதலைப் பரிமாற ஏற்ற நாளாக உள்ளது பிப்ரவரி 14 ல் வரக்கூடிய காதலர் தினம். அன்றைய தினம் மட்டுமல்ல, வாரம் முழுவதும் ரேஸ் டே, ப்ரோபோஸ் டே, டெடி டே, முத்த தினம், ப்ராமிஸ் டே எனத் தொடங்கி காதலர் தினத்தில் முடிவடைகிறது.

தங்களுக்கான காதலை வெளிப்படுத்த வேண்டும் என ஏங்கித் தவிர்ப்பவர்களுக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைக்கு காதலை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற ப்ரோபோஸ் தினத்தில் உங்களுடைய காதலர்களுக்கு என்ன தான் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தினாலும் எரிச்சல் அடைவார்கள். எளிமையாக இருக்க வேண்டும். அதே சமயம் மனதிற்குப் பிடித்ததாக இருக்க வேண்டும் என்று யோசித்தால் நிச்சயம் கவிதைகளைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.

propose day 2025

காதலை வெளிப்படுத்த விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கவிதைகள் போதும். சிலருக்கு கவிதைகள் எழுத தெரியும். சிலருக்கு ஏதோ கொஞ்சமாக தெரியும். இனி அந்த கவலை வேண்டாம். அன்புக்குரியவர்களைக் கவருவதற்கான சில காதல் கவிதைகளை உங்களுடன் இங்கே பகிர்கிறோம். ப்ரோபோஸ் டேவில் தெரிவித்து காதலை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ப்ரோபோஸ் டேக்கான காதல் கவிதைகள்:

  • இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்? போதுமடி பெண்ணே. இந்த காதலர் தினத்திலாவது நம் காதலை உறுதிப்படுத்திக் கொள்வாமா? உன் காதல் கண்களில் நானும் தவழ காத்திருக்கிறேன். நல்ல முடிவை விரைவில் தெரிவித்துவிடு. உனக்காக காத்திருக்கும் உனக்கானவன் நான் மட்டும் தான்.
  • உனது கண்களைப் பாா்க்கும் போது, ஒவ்வொரு நாளும் அற்புதமாக எனக்கு மட்டும் தெரிகிறதோ? என்னவளே இனியும் காத்திருக்க வைக்காதே!
  • இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும் உன்னை கரம் பிடிப்பதற்கு!

மேலும் படிக்க:Valentine's Week List 2025: ரோஸ் தினம் முதல் முத்த தினம் வரை காதலர் தின வாரத்தின் சிறப்புகள்

  • உறங்கும் போது கனவிலும், விடிந்தவுடன் நினைவிலும் என்றும் என்னுடன் நீயே இருக்க தவம் செய்து காத்திருக்கிறேன்.
  • என் இதயத்தில் உனக்கான வீட்டைக் கட்டி வைத்துள்ளேன். எப்பொழுது நமக்கானதாக மாற்றிக் கொள்வோம். இனிய ப்ரோபோஸ் டே வாழ்த்துக்கள்
  • என்னுடைய இதயம் எப்போதும் துடித்துக்கொண்டிருப்பது எனக்காக வாழ மட்டுமல்ல, உன்னுடன் சேர்ந்துப் பயணிக்க என்பதை மறந்துவிடாதே!
  • உன்னுடன் பேச முடியாத அனைத்தையும் என் மௌனங்களும், கண்களும் வெளிப்படுத்துவதை எப்போது உணர்வாய். பேசுவதற்கு பயமாக உள்ளது..காதலை சொல்ல வார்த்தைகள் வரவில்லை. ஆனால் நீ தான் என் உயிர் என்பதை எப்படி வெளிப்படுத்துவேன். கொஞ்சம் சொல்லித் தருகிறாயா? இப்படியாவது காதலை வளர்த்துக் கொள்வோம்.
  • உன்னோடு பேசாமல் இருக்கும் வலியை விட, உனக்காக சேர்த்து வைத்துள்ள வார்த்தைகளை எப்பொழுது சொல்வேன் என்ற ஏக்கம் தான் மனதை ரணமாக்குகிறது. சில நேரம் உலாவிக் கொண்டு கதைப்போம் எனக்காக சிறிது நேரம் கொடுக்கிறாயா?

மேலும் படிக்க:First Valentines Day Celebration: முதல் முறையாக காதலர் தினத்தை கொண்டாடும் விரும்பும் நபர்களுக்கு சில ஐடியாக்கள் இதோ!

  • காதலை வெளிப்படுத்தக்கூடிய ப்ரோபோஸ் தினத்தில் என் வார்த்தைகளை நம்புவாய் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த காதல் திருமணத்தில் முடியும் நம்பிக்கையுடன் பயணிப்போம் வா என்னுடன்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP