herzindagi
image

First Valentines Day Celebration: முதல் முறையாக காதலர் தினத்தை கொண்டாடும் விரும்பும் நபர்களுக்கு சில ஐடியாக்கள் இதோ!

முதல் முறையாக காதலர் தினத்தை உங்கள் துணையுடன் சிறப்பாக கொண்டாட ஆசைப்படுகிறீர்களா?, ஆனால் குறைந்த பட்ஜெட் நினைத்து கவலைப்படுகிறீர்கள் என்றால், இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-02-07, 22:19 IST

உங்கள் துணையுடன் முதல் முறையாக காதலர் தினத்தைக் கொண்டாடப் போகிறீர்கள் என்றால், அது நிச்சயமாக உங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த நாளை உங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்கும் வகையில் தனித்துவமாகவும் சிறப்பாகவும் மாற்ற ஆசைப்படுவீர்கள். இதுபோன்ற நிலையில் குறைந்த விலையில் சிறப்பாக காதலர் தினத்தை கொண்டாட விரும்பினால். இந்த ஐடியாக்களை பயன்படுத்தி பாருங்கள்.

 

மேலும் படிக்க: காதலின் சின்னம் “ரோஜா” பூ; அன்பான உறவுக்கு கொடுத்து லவ் சொல்லுங்க

உங்கள் காதலருக்கு பிடித்த பரிசு

 

உங்கள் முதல் காதலர் தினத்தை சிறப்பானதாக மாற்ற உங்கள் காதலருக்கு ஒரு பரிசை வாங்க வேண்டும். உங்கள் பட்ஜெட் நன்றாக இருந்தால், ஸ்மார்ட் வாட்ச், இயர் பட்ஸ் மற்றும் ஹெட்ஃபோன்கள் போன்ற மின்னணு பொருட்களை பரிசளிக்கலாம். ஆனால் நீங்கள் குறைந்த பட்ஜெட்டில் கொண்டாட விரும்பினால், காபி குவளை, மலர் புர்கா, புகைப்பட சட்டகம், புகைப்பட சட்டகம் மொபைல் கவர், மோதிரம் அல்லது உடையை பரிசளிக்கலாம்.

First Valentines Day 3

 

சர்ப்ரைஸ் பயணத்தைத் திட்டமிடுங்கள்

 

முதல் காதலர் தினத்தை மறக்கமுடியாததாக மாற்ற சிறந்த பயணத்தை திட்டமிடலாம். உங்கள் துணையுடன் நீங்கள் பைக் சவாரி செய்யலாம். நாள் முழுவதும் மகிழ்ச்சியான பயன்செய்து, இரவு உணவு நேரத்தை இருவரும் சேர்ந்து தனியாக சாப்பிட திட்டமிடலாம். சாப்பிடும் நேரத்தின் உரையாடல் மேலும் உங்களை மகிழ்ச்சியாக இருக்கும்.

 

பரிசுடன் கையால் எழுதப்பட்ட கடிதத்தை தரலாம்

 

முதல் காதலர் தினத்தை சிறப்பானதாக்க மாற்ற காதலருக்கு கடிதம் எழுதலாம். அதில் உங்கள் உணர்வுகளை எழுதுங்கள். உங்கள் முதல் சந்திப்பின் பயணத்தை அதில் குறிப்பிடலாம். மேலும், அவரைப் பற்றி உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை கடிதத்தில் சொல்லலாம்.

First Valentines Day 1

உணவகத்தை முன்பதிவு செய்து சாப்பிடலாம்

 

முதல் காதலர் தினத்தில், உங்கள் துணையுடன் ஒரு நல்ல உணவகத்திற்குச் சென்று சாப்பிடலாம். அவர்கள் விரும்பும் உணவை நீங்கள் முன்பதிவு செய்து சர்ப்ரைஸ் செய்யலாம். உங்களால் ஒரு பயணத்தைத் திட்டமிட முடியாவிட்டால், நீங்கள் இருவரும் முதல் முறையாக சந்தித்த இடத்திற்கு அழைத்துச் செல்லலாம். இந்த வழியில் உங்கள் முதல் சந்திப்பின் தருணங்களும் மறக்கமுடியாததாக மாறும்.

 

வீட்டிலேயே காதலர் தினத்தன்று இரவு உணவைத் திட்டமிட வழிகள்

 

  • இதற்காக நீங்கள் சாப்பிடும் அறைகளை LED விளக்குகளால் அலங்கரிக்க செய்யலாம்.
  • நீங்கள் சாப்பிடம் இடத்தில் ரோஜா இதழ்களால் அலங்கரிக்கலாம்.
  • உங்கள் துணைக்கு உங்கள் சொந்த கைகளால் உணவு சமைக்கவும்.
  • இதற்குப் பிறகு, மென்மையான இசையை வாசித்து, உங்கள் துணையுடன் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவை உண்ணுங்கள்.
  • காதல் என்பது பணத்தால் செய்யப்படுவதில்லை, இதயத்தால் ஒன்று சேருவது. கண்டிப்பாக இந்த இரவு உணவு தருனம் உங்கள் காதலருக்கு பிடிக்கும்.

First Valentines Day 2


மேலும் படிக்க: முட்கள் இன்றி பூத்த ரோஜாவே என் காதலை கொஞ்சம் கேள்

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]