Rose Day Wishes : முட்கள் இன்றி பூத்த ரோஜாவே என் காதலை கொஞ்சம் கேள்

காதல் உறவில் அன்பின் அடையாளமாக விளங்கும் ரோஜா பூ காதலர் வாரத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. பிப்ரவரி 7ஆம் தேதி கடைபிடிக்கப்படும் ரோஸ் நாளில் காதல் உறவுக்கு அனுப்ப வேண்டிய ரோஸ் தின வாழ்த்து, ரோஜா கவிதை, குறுஞ்செய்தி இங்கே...
image

காதல் ஜோடிகளின் கொண்டாட்ட வாரம் தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம். பிப்ரவரி 7ஆம் தேதி பிப்ரவரி 14ஆம் தேதி வரை காதலர் வாரத்தை கொண்டாடி தீர்க்க காதலர்கள் தயாராகி வருகின்றனர். இந்த காதல் வாரம் தங்களுடைய காதலை பிறரிடம் வெளிப்படுத்துவதற்கு அற்புதமான வாய்ப்பாகும். பிப்ரவரி 7ஆம் தேதி ரோஸ் ( ரோஜா) தினத்துடன் காதலர் வார கொண்டாட்டம் தொடங்குகிறது. ரோஸ் தினத்தில் காதல் உறவில் இருக்கும் நபர்கள் தங்கள் அன்புக்குரியவரிடம் ரோஜா கொடுக்கின்றனர். அன்பின் அடையாளமாக ரோஜா பூ திகழ்கிறது. இந்த நாளில் காதல் உறவுக்கு அனுப்ப வேண்டிய ரோஸ் தின வாழ்த்து, கவிதை, குறுஞ்செய்தி இங்கு பகிரப்பட்டுள்ளது.

rose day messages greetings

ரோஸ் தின வாழ்த்து 2025

  • உன் நினைவுகளைத் தினமும் ரோஜா செடியிடம் பகிர்ந்து கொண்டேன்... அதற்கும் ஆசை பிறந்தது உன்னைக் காண தினமும் பூக்க வேண்டும் என்று…
  • இவ்வுலகில் முட்கள் இன்றி பூத்த ஒரே ரோஜா பூ நீதானடி…
  • ஒற்றை ரோஜாவைக் கையில் ஏந்தி உன்னைக் காண வந்தேன்… என் கையிலிருந்த ரோஜாவும் காதல் கொண்டது உன் கூந்தலில் தவழ...
  • என் தோட்டம் முழுவதும் ரோஜா பூக்கள்… ஒன்றைக் கூட பறிக்க மனம் வரவில்லை… அவற்றில் உன் முகம் தெரிவதால்...
  • உன் அழகின் முன்னால் ஆயிரம் ரோஜாக்களும் ஒன்றுமில்லை...
  • நம் கண்கள் பேசாத காதலை… நம் உரையாடல்கள் உணராத காதலை… நான் மெளனமாய் நீட்டும் இந்த ஒற்றை ரோஜா சொல்லும்…
  • ரோஜா பூவை பறித்த போது… கை வலித்தது முள் குத்தியதால்… ஆனால் அதை நீங்க வாங்க மறுத்ததால்… என் இதயமே வலிக்கிறது…
  • என்னுடைய காதலை புரிந்த ரோஜா ஒன்று… ஏக்கத்துடன் சொன்னது நம் காதல் கைகூடுவதற்காக… உயிரை விடும் கடைசி ரோஜாவாக நான் இருக்கட்டும் என்று
  • உன் புன்னகையில் மலர்ந்த முதல் ரோஜா என் காதல்...
  • காயப்படுத்தும் முட்செட்டிகளில் உள்ள அழகான ரோஜா பூவைப் போல என் காதலில் வலிகள் அதிகம் இருந்தாலும் நான் கொண்ட காதல் அந்த பூவைப் போல மிகவும் அழகானது…
  • ஆயிரம் ரோஜா மலர்கள் இருந்தாலும் தலையில் வைக்க ஒரு ரோஜா போதும்… அதுபோல ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உன் அன்பு மட்டும் போதும் எனக்கு…
  • முட்களின் நடுவே வாழும் ஒற்றை ரோஜாவாய்… தனித்தே வாழ்கிறேன் என் வாழ்க்கையை… உன் நினைவுகளை எனக்குள் சுமந்தபடி
  • அலை இல்லாத கடல் இல்லை… மேகம் இல்லாத வானம் இல்லை… முள் இல்லாத ரோஜா இல்லை… அதுபோல உன் நினைவு இல்லாமல் நானும் இல்லை…
  • மலர்களின் அரசியே எங்கும் சிரிக்கிறாய்… முட்கள் உன்னைச் சூழந்த போதிலும் சிரிக்கிறாய்… ஒரு நாள் வாழ்க்கை என்ற போதிலும் சிரிக்கிறாய்… உன் போல் வாழ்க்கை எனக்கும் அமையுமோ…

மேலும் படிங்கHappy Rose Day 2024: காதலிக்கு அனுப்ப வேண்டிய ரோஜா தின கவிதைகள்!

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP