ஒவ்வொரு ஆண்டும் ரோஜா தினத்தன்று காதலன் தனது காதலிக்கு ரோஜாவை அன்பின் வெளிப்பாடாக வழங்குகிறான். அதேபோல இந்தாண்டு பிப்ரவரி ஏழாம் தேதி காதல் வாரம் தொடங்கும் நிலையில் முதன் நாளான ரோஜா தினத்தன்று உங்களுடைய காதல் உறவுக்கு ரோஜா தின வாழ்த்துகளை அனுப்பலாம். இது உங்களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வாய்ப்பாகும்.
காயப்படுத்தும் முட்செட்டிகளில் உள்ள அழகான ரோஜா பூவைப் போல என் காதலில் வலிகள் அதிகம் இருந்தாலும் நான் கொண்ட காதல் அந்த பூவைப் போல மிகவும் அழகானது…
உன்னுடைய நினைவுகளைத் தினமும் ரோஜா செடியிடம் பகிர்ந்து கொண்டேன் அதற்கும் ஆசை பிறந்தது உன்னைக் காண தினமும் பூக்க வேண்டும் என்று…
ஆயிரம் ரோஜா மலர்கள் இருந்தாலும் தலையில் வைக்க ஒரு ரோஜா போதும்… அதுபோல ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உன் அன்பு மட்டும் போதும் எனக்கு…
இவ்வுலகில் முற்கள் இன்றி பூத்த ஒரே ரோஜா பூ நீதானடி…
முட்களின் நடுவே வாழும் ஒற்றை ரோஜாவாய்… தனித்தே வாழ்கிறேன் என் வாழ்க்கையை… உன் நினைவுகளை என்னுள் சுமந்தபடி
ஒற்றை ரோஜாவைக் கையில் ஏந்தி உன்னைக் காண வந்தேன்… என் கையிலிருந்த ரோஜாவும் காதல் கொண்டது உன் கூந்தலில் தவழ...
நம் கண்கள் பேசாத காதலை… நம் உரையாடல்கள் உணராத காதலை… நான் மெளனமாய் நீட்டும் இந்த ஒற்றை ரோஜா சொல்லும்…
என் தோட்டம் முழுவதும் ரோஜா பூக்கள்… ஒன்றைக் கூட பறிக்க மனம் வரவில்லை… அவற்றில் உன் முகம் தெரிகிறது என்பதால்…
என்னுடைய காதலை புரிந்த ரோஜா ஒன்று… ஏக்கத்துடன் சொன்னது உன் காதல் கைகூடுவதற்காக… உயிரை விடும் கடைசி ரோஜாவாக நான் இருக்கட்டும் என்று
அலை இல்லாத கடல் இல்லை… மேகம் இல்லாத வானம் இல்லை… முள் இல்லாத ரோஜா இல்லை… அதுபோல உன் நினைவு இல்லாமல் நானும் இல்லை…
ரோஜா பூவை பறித்த போது… கை வலித்தது முள் குத்தியதால்… ஆனால் அதை நீங்க வாங்க மறுத்ததால்… என் இதயமே வலிக்கிறது…
உன் இதழ்களின் அழகில் தோற்றுப்போன ரோஜா இதழ்களை அன்பெனும் பசையொட்டி… மீண்டும் உன்னிடமே நீட்டுவேன்… நீ பெற்றுக் கொண்டால் நானே காம்பாகாவும் முள்ளாகாவும் மாறி… உன்னைக் காதல் செய்வேன்...
உன் புன்னகையில் மலர்ந்த முதல் ரோஜா என் காதல்
மலர்களின் அரசியே எங்கும் சிரிக்கிறாய்… முட்கள் உன்னைச் சூழந்த போதிலும் சிரிக்கிறாய்… ஒரு நாள் வாழ்க்கை என்ற போதிலும் சிரிக்கிறாய்… உன் போல் வாழ்க்கை எனக்கும் அமையுமோ…
மேலும் படிங்க காதலிக்கு ஏன் ரோஜா கொடுக்கனும் ? உடனே லவ் ஓகே ஆகுமா ?
இது போன்ற காதலர் தின வாழ்த்துகள், கவிதைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]