இன்றைய சூழலில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நாமும் பல வாழ்வியல் மாற்றங்களையும் மாற்றிவிட்டோம். குறிப்பாக குடும்ப உறவுகள் என்பது முன்பைப் போன்றில்லை. தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா,அண்ணன், தங்கை, மாமா, அத்தை என உறவினர்கள் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வளர்ந்த காலம் போய்விட்டது. இந்த உறவுகளிலிருந்து என்றைக்கு விலகினார்களோ? அன்றைய காலம் முதலே குழந்தைகள் பல இன்னல்களையும், மன உளைச்சல்களையும் சந்திக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் தான் ஒவ்வொரு குழந்தைகளின் வளர்ப்பிலும் தாய் வழி அல்லது தந்தை வழி தாத்தா பாட்டிமார்கள் மிகவும் முக்கியமானவர்களாக உள்ளனர். இதோ ஏன்? அத்தகைய சிறப்பு வாய்ந்தவர்களாக உள்ளனர்? என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்..
மேலும் படிக்க: மொபைல் பயன்பாடு இல்லாமல் குழந்தைகளை மாற்ற வேண்டுமா? பெற்றோர்கள் செய்ய வேண்டியது இது தான்!
ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் தாத்தா பாட்டியுடன் நேரத்தைச் செலவிடுவது என்பது அவர்களுக்குக் கிடைத்த பொற்காலம் என்று தான் கூற வேண்டும். பெற்றோர்களை விட தாத்தாக்கள் குழந்தைகளை எதார்த்தமாக குடும்பத்தின் வரலாறு மற்றும் பழக்க வழக்கங்களையும், மரியாதையும் எளிதில் கற்றுக் கொடுப்பார்கள். பாசம், மரியாதை சேவை மற்றும் நல்ல குணங்கள் அனைத்தையும் தாத்தாக்களுடன் பயணிக்கும் போதே குழந்தைகள் அறிந்துக் கொள்கிறார்கள். குறிப்பாக மற்ற குழந்தைகளை விட சாமர்த்தியாகவும், முதிர்ச்சியடைந்த குழந்தைகள் போன்றும் வளர்கிறார்கள்.
தாத்தா பாட்டி உறவு என்பது தனித்துவமான பாசத்தை அவர்களுக்குக் கொடுக்கும். தங்களது பேரப்பிள்ளைகளுடன் அவர்கள் வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள், பணியிடத்தில் கடந்து வந்த பாதை என அவர்கள் பகிரும் போது குழந்தைகளின் அறிவாற்றல் மேம்படுகிறது. மேலும் குடும்பத்தின் உறவுகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை அறிந்து அவர்களை மரியாதையுடன் நடத்தும் பழக்கமும் தாத்தா- பாட்டி உறவுகளின் வழியாக கிடைக்கிறது.
ஒவ்வொரு தாத்தா மற்றும் பாட்டிகளும் குழந்தைகளுக்கு நற்பண்புகளைக் கற்றுக் கொடுப்பது, நீதிக்கதைகளைச் சொல்லுவது, இரக்கம், அன்பு, போன்ற அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொடுக்கிறார்கள். பள்ளிக்குச் செல்வதற்கு முன்னதாகவே ஆரம்ப கல்வியைக் கொடுக்கும் ஆசான்களாக உள்ளார்கள். தாத்தா- பாட்டி இருக்கும் வீடுகளில் குழந்தைகளுக்குப் பராமரிப்பாளர்கள் யாரும் தேவையில்லை. சில நேரங்களில் பராமரிப்பாளர்கள் வைப்பதால் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் ஏற்படும். இந்த சமயத்தில் தாத்தா- பாட்டிகள் தான் பொறுப்புடன் அவர்களை வளர்க்கிறார்கள். மேலும் பாதுகாப்புடனும் வளர்கிறார்கள்.
மேலும் படிக்க: கர்ப்பிணி பெண்கள் வளையல் அணிய காரணம் என்ன?
குறிப்பாக குழந்தைகள் தாத்தா பாட்டியுடன் வளரும் போது அவர்கள் மட்டும் சந்தோஷமாக இருப்பதில்லை. வயதான காலத்தில் தாத்தா- பாட்டிகளும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. எனவே உங்களது குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியுடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றால் முடிந்தவரை சில நாட்களுக்காவது தாத்தா பாட்டிகளுடன் வளர்க்கும் சூழலை பெற்றோர்கள் உருவாக்கிக் கொடுக்கவும்.
Images source - Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]