குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்ப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் தலையாய கடமைகளில் ஒன்றாக உள்ளது. பள்ளிக்குச் செல்லும் போது கூட பெற்றோர்களின் பொறுப்பு கொஞ்சமாக இருந்தாலும் விடுமுறை நாட்களில் தான் அளவுக்கு அதிகமாக இருக்கும். ஆம் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வந்ததும் முதலில் தேடுவது அவர்களது பெற்றோர்களின் மொபைல் போன்கள் தான். என்ன பார்க்கிறார்கள்? என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் 24 மணி நேரமும் கொடுத்தாலும் கூட அவர்கள் மொபைல் பயன்பாட்டை நிறுத்த மாட்டார்கள்.
பள்ளிக்குச் செல்லும் போதே இந்த நிலை என்றால், விடுமுறை நாட்களில் சொல்லவே தேவையில்லை. காலையில் எழுந்தது முதல் தூங்கும் வரை மொபைல் போன்கள் தான். பாடல்கள் கேட்பது முதல் அவர்களுக்குப் பிடித்த கார்டூன் வீடியோக்கள் பார்ப்பது வரை அதிக நேரத்தை மொபைலில் தான் செலவிடுகிறார்கள். இதிலிருந்து உங்களது குழந்தைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தும் எப்படியெல்லாம் குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக மாற்ற வேண்டும்? என்பது குறித்து விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்..
மேலும் படிக்க: பெண் குழந்தைகளிடம் மறந்தும் இந்த விஷயங்களை செல்லிடாதீங்க!
முன்பெல்லாம் விடுமுறை வந்தாலே அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் விளையாடுவதற்கு அதிக நேரத்தை குழந்தைகள் செலவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு இந்த நிலை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. குழந்தைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதற்காக வீட்டிற்குள்ளேயே அடைத்துவிடுகின்றனர். இதனால் அவர்கள் வேறு வழியின்றி மொபைல் போன்களை அதிகளவில் பார்க்க ஆரம்பிக்கின்றனர். எனவே குழந்தைகளை வீட்டிற்குள் கட்டிப்போடாமல் கொஞ்சம் வெளியில் விளையாட சொல்லுங்கள். பெற்றோர்களுக்கு பயம் இருந்தால் நீங்களும் வெளியில் அவர்களுடன் நேரத்தைச் செலவிட முயற்சிக்கவும்.
விளையாட்டிற்கு அடுத்தப்படியாக குழந்தைகளை கலைதிறனில் ஈடுபடுத்த முயற்சிக்கவும். கலர் பென்சில், பேப்பர் போன்றவற்றை அவர்களுக்கு வாங்கிக் கொடுத்து ஏதாவது வரையச் சொல்லுங்கள். சின்ன சின்னதாக அவர்கள் வரைந்தாலும் பெரிதாக அவர்களைப் பாராட்டுங்கள். இது போன்று நீங்கள் மேற்கொள்ளும் போது அவர்களுக்கு மொபைல் பார்ப்பதை விட பாராட்டுகளைப் பெறுவதற்காக பிடித்த விஷயங்களை மேற்கொள்வார்கள். ஓவியம் மட்டுமின்றி சிலம்பம், கராத்தே, இசை, நடனம் போன்ற பல்வேறு கலைத்திறன்களை வளர்ப்பதற்கு அவர்களை ஊக்குவிக்கவும்.
இன்றைக்கு குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்குப் பேசுவதற்குக் கூட நேரம் இல்லை. சரியான நேரத்தில் பணிகளை முடிக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள், அவர்களது கைகளில் மொபைல் போன்களைத் தான் கொடுப்பார்கள். இது முற்றிலும் தவறு. குழந்தைகள் மொபைல் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றால், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுங்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் உட்கார்ந்து சாப்பிடுவது முதல் விளையாடுவது, மனம் விட்டு பேசுவது போன்ற விஷயங்களில் ஈடுபட முயற்சிக்கவும்.
மேலும் படிக்க: கோடை விடுமுறையில் குழந்தைகளை மகிழ்ச்சியாக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது?
இது போன்ற விஷயங்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டாலே நிச்சயம் உங்களது குழந்தைகள் மொபைல் பயன்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்க்க முயற்சிப்பார்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]