பெண் குழந்தைகளிடம் மறந்தும் இந்த விஷயங்களை செல்லிடாதீங்க!

பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளும், வன்முறைகளும் அதிகரித்து வரக்கூடிய நிலையில் பெண் குழந்தைகளைப் பாதுகாப்புடன் வளர்க்க வேண்டிய பொறுப்பு  பெற்றோர்களுக்கு உள்ளது. 

girl child parenting tips

பெண் குழந்தைகள் ஒவ்வொரு வீட்டிலும் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளித்தரக்கூடிய பொக்கிஷம். அலுவலகம் மற்றும் வீட்டுச்சூழலில் பல்வேறு மன துயரங்கள் வந்தாலும் குழந்தைகளின் முகத்தைப் பார்க்கும் போது அத்தனையும் சட்டென்று மறந்துப் போகும். சிறு வயதில் இருந்தே பாசத்தை எந்தளவிற்கு அதிகமாக கொடுத்து வளர்கிறீர்களோ? அந்தளவிற்கு அவர்களை சமூகத்தில் பொறுப்புடன் வளர்க்க சில விஷயங்களைக் கட்டாயம் கற்றுத் தர வேண்டும். இதோ பெண் குழந்தைகளை வைத்துள்ள ஒவ்வொரு பெற்றோர்களும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

பெண் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டிய விஷயங்கள்:

  • சமூகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளும், வன்முறைகளும் அதிகரித்து வரக்கூடிய நிலையில் பெண் குழந்தைகளைப் பாதுகாப்புடன் வளர்க்க வேண்டிய பொறுப்பு அனைத்துப் பெற்றோர்களுக்கும் உள்ளது. மேலும் தன்னை அனைத்து சூழல்களிலும் தற்காத்துக் கொள்ளக்கூடிய அடிப்படை விஷயங்களைக் கற்றுத் தர வேண்டும்.
  • வாழ்நாள் முழுவதும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். குறிப்பாக யார் மீதும் அளவு கடந்த நம்பிக்கை காட்டுவதோ அல்லது வெறுப்பைக் காட்டக்கூடாது என சொல்லிக் கொடுக்க வேண்டும். பல நேரங்களில் யார் மனதையும் புண்படும் படி நடந்துக் கொள்ளக்கூடாது என்பதையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • முடியாது என்ற ஒன்றும் இல்லை. எனவே எந்த சூழ்நிலை வந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வதற்கான ஆற்றலையும், மனநிலையும் உருவாகும் படி அவர்களைப் பக்குவப்படுத்தக் கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் சின்ன சின்ன விஷயங்களைச் செய்தாலும் அவர்களை மனதார பாராட்ட வேண்டும்.
  • ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட சூழல்களை சந்திக்க நேரிடும் என்பதால், புதிய மனிதர்களிடம் எளிதாகப் பழகுவது எப்படி? அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் திருமணத்திற்குப் பின்னதாக எந்த துயரங்கள் வந்தாலும் அவர்களால் சமாளிக்க முடியும்.
  • பெண் குழந்தைகளிடம் அச்சம் தரக்கூடிய எந்த விஷயங்களையும் சொல்லக்கூடாது. அதே சமயம் உங்களிடம் திறமையும், முயற்சியும் இல்லை. ஏன் நேரத்தை வீணடிக்கிறாய்? என்பது போன்ற வார்த்தைகளைச் சொல்லக்கூடாது.
  • ஆண் குழந்தைகள் தான் ஒஸ்தி என்ற வார்த்தைகளை ஒருபோதும் பெண் குழந்தைகளிடம் சொல்லக்கூடாது. இத்தகைய சொல் அவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்கும் என்பதால் இதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க:கோடை விடுமுறையில் குழந்தைகளை மகிழ்ச்சியாக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது?

இதுபோன்ற விஷயங்களைக் கற்றுக் கொடுத்தாலே, நிச்சயம் பெண் குழந்தைகள் எந்த சூழலையையும் சமாளிக்கும் திறன் உள்ளவர்களாக மாறிவிடுவார்கள். குறிப்பாக பெண் குழந்தைகளிடம் நீங்கள் நண்பனாக பழகினாலே எந்த சூழலிலும் உங்களிடம் இருந்து எதையும் மறைக்க மாட்டார்கள். இதனால் தேவையில்லாத பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP