பல நேரங்களில் நம்மை சுற்றி நிறைய பேர் இருந்தாலும் தனிமையாகவே உணருவோம். ஏன் தனிமையாக உணர்கிறோம் என்ற காரணமே புரியாது. நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என உள்ளுக்குள் புலம்புவோம். நம்மை சுற்றி சிலர் இருக்கின்றனர் என நினைத்து கொண்டு தனியாக பேசி கொண்டு இருப்போம். இதற்கு எப்படி தீர்வு காண்பது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சிலருக்கு இயல்பாகவே யாருடனும் நெருங்கி பழகும் எண்ணம் இருக்காது. அவர்களை ஏதும் செய்ய இயலாது. திடீரென ஒரு பிரச்சினை ஏற்பட்டு அதன் பிறகு தனிமையாக உணர்ந்தால் கீழ்காணும் ஏழு விஷயங்களை படிப்படியாக முயற்சிக்கவும்.
உயிர் கொடுப்பான் தோழன் என்ற வாசகத்தை தனியாக இருக்கும் போது நினைவில் கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு ஒரு நண்பராவது இருக்க வாய்ப்புண்டு. அவரை நேரில் சந்திக்க முயற்சி செய்யுங்கள் அல்லது தொலைபேசியில் அழைத்து நீங்கள் எதிர்கொள்ளும் தனிமையை பற்றி விவரியுங்கள்.
உங்களுக்கு ஆர்வமுள்ள விஷயங்களில் கவனம் செலுத்தி நேரத்தை பயனுள்ளதாக மாற்றிடுங்கள். புத்தக வாசிப்பு, ஓவியம் வரைதல் போன்றவை பயனுள்ளதாக அமையும்.
சமூகத்தில் உங்களது பங்களிப்பை உறுதிப்படுத்தை தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வார விடுமுறைகளில் பணி செய்யுங்கள். வீட்டின் அருகே உள்ள குளங்களை சுத்தம் செய்வது, விழிப்புணர்வு பேரணிகளில் பங்கேற்பது போன்றவை ஆக்கப்பூர்வமான விஷயங்களாகும்.
சமூக வலைதளங்களை பயன்படுத்தும் நபராக இருந்தால் உங்களுக்கான குழுக்களை கண்டறியவும். உதாரணமாக உங்களுக்கு மலையேற்றம் பிடிக்கும் என்றால் அதற்கென உள்ள குழுவில் இணைந்து அவர்கள் திட்டமிடும் பயணங்களுக்கு நீங்களும் சென்று புதிய நட்பு வட்டாரத்தை உருவாக்குங்கள்.
தினமும் உடற்பயிற்சி செய்வது உங்களது மனநிலையை மேம்படுத்தும். நடைபயிற்சி, யோகா அல்லது நடனம் எதுவாக இருந்தாலும் உடல் செயல்பாடுகளை அதிகப்படுத்துவது தனிமையை எதிர்த்து போராட உதவும்.
உங்கள் மீது அக்கறை கொள்ளுங்கள். உடல்நலன், ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். இதனால் உங்களது ஒட்டுமொத்த நல்வாழ்வும் மேம்படும்.
மேற்கண்ட விஷயங்களை பின்பற்றிய பிறகும் நீங்கள் தனிமையாக உணர்ந்தால் கட்டாயமாக உளவியல் நிபுணரை அணுகி உங்கள் பிரச்சனையை கூறவும். அவர் சொல்லும் வழிகாட்டுதலை பின்பற்றி தனிமையில் இருந்து மீள முயற்சி செய்யுங்கள்.
தனிமையாக இருப்பது என்பது ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ளும் விஷயம் தான். இதை ஒரு அனுபவமாக கருதி நேர்மறையாக சிந்தித்து தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]