திருமணமான பெண்களும் கர்ப்பிணி பெண்களும் தினமும் கையில் வளையல் அணிய வேண்டும் என்று சாஸ்திரம் சம்பிரதாயம் கூறுகிறது. பெண்களுக்கு கண்ணாடி வளையல் முதல் தங்க வளையல்கள் வரை எல்லா வளையல்களும் பொருத்தமாக இருக்கும். ஆனால் அந்த வளையல்களில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். ஆரோக்கியம் மற்றும் ஜோதிட ரீதியாக வளையல்களுக்கு பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது உண்டு. அதேபோல கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் தொடர்ந்து வளையல் அணிந்தால் அவர்கள் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பொதுவாகவே பெண்கள் கையில் வளையல்களை அணிவதால் மணிக்கட்டில் உராய்வு ஏற்படுகிறது. இதனால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் கர்ப்பிணி பெண்கள் வளையல் அணிந்தால் உயர் ரத்த அழுத்தத்தின் வாய்ப்புகள் குறையும்.
கர்ப்பிணி பெண்கள் அவர்களுடைய ஏழாவது மாதத்திற்கு பிறகு வளையல் அணிவது வழக்கம். இது அவர்கள் கருவில் வளரும் குழந்தையின் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஏழு மாதத்திற்கு பிறகு தான் குழந்தைக்கு மூளை செல்கள் உருவாக துவங்கும். அப்போது அந்த கருவில் இருக்கும் குழந்தை முதல் முறையாக ஒலிகளை அடையாளம் காண தொடங்குகிறது. இந்த நிலையில் வளையல்களின் சத்தம் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியை தூண்டுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் கர்ப்பிணி பெண்களின் மன அழுத்தத்தை போக்கி மனதை சாந்தமாக்கவும் வளையல்கள் பெரிதும் உதவுகிறது. இதனால் தான் கர்ப்ப காலத்தில் ஐந்து அல்லது ஏழாவது மாதத்தில் சம்பிரதாயம் சாஸ்திரம் என்ற பெயரில் பெண்களுக்கு வளைகாப்பு நடத்துகின்றனர்.
கர்ப்பிணி பெண்கள் கண்ணாடி வளையல்களை அணிந்து வந்தால் நேர்மறை ஆற்றல் ஏற்படும். மேலும் கண்ணாடி வளையல்கள் சுற்றுப்புறத்திலிருந்து நேர்மறை ஆற்றலை உறிஞ்சி எதிர்மறை ஆற்றலை நீக்க உதவுவதாக ஜோதிடம் கூறுகிறது. குறிப்பாக கண்ணாடி வளையல்கள் சத்தம் பெண்களின் மனநிலையை அமைதியாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
பொதுவாகவே சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிற வளையல்கள் மிகவும் மங்களகரமான நிறங்களாக கூறப்படுகிறது. இது நேர்மறை ஆற்றலையும் அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஒரு சில நேரங்களில் சில கோயில்களில் கூட திருமணமான பெண்களுக்கு சிவப்பு அல்லது பச்சை நிறத்தில் வளையல்களை வழங்குவார்கள். ஏனென்றால் திருமணம் ஆன பெண்கள் மட்டுமே இந்த சிவப்பு மற்றும் பச்சை நிற கண்ணாடி வளையல்களை அணிய வேண்டும் என்பது ஜோதிட விதி. அதே போல பெரும்பாலான நேரங்களில் கையில் வளையல்கள் அணிந்திருக்கும் பெண்களுக்கு மற்ற பெண்களை விட குறைந்த சோர்வு மற்றும் உடல் நல ஆரோக்கியம் மேம்படுகிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]