Happy Teddy Day : காதலியின் அன்புத் தோழனுக்கு கொண்டாட்டம்! டெடி டே கவிதைகள்

பெண்களின் உடன் பிறவா தோழனான டெடி பொம்மையை அவர்களுக்கு பரிசளித்து உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.

teddy day messages

காதலர் வாரத்தின் ஒரு பகுதியாக பிப்ரவரி 10ஆம் தேதி கொண்டாடப்படும் டெட்டி டே காதலின் உலகளாவிய சின்னமான டெட்டி பியர்க்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மகிழ்ச்சியான நாளாகும். இந்த சிறப்பான நாளில் அபிமான டெடி பியர் பொம்மைகளைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. டெடி பியர் காலத்தால் அழியாத அழகைக் கொண்டிருக்கிறது. இவை அரவணைப்பு, ஆறுதல் மற்றும் ஏக்கம் போன்ற உணர்வுகளைத் தூண்டுகின்றன.

டெடி டே-ல் காதலர்கள் தங்கள் அன்பின் அடையாளமாக இந்த அன்பான தோழனை பரிமாறிக்கொள்கிறார்கள். இது அவர்களின் காதல் உறவு பயணத்தில் ஒருவருக்கொருக்கான ஆறுதல் மற்றும் ஆதரவைக் குறிக்கிறது. இந்த நாளில் டெடி பியர்கள் அன்பின் அடையாளம் மட்டுமல்ல நீடித்த நினைவுகளை உருவாக்கவும், பிணைப்பையும் வலுப்படுத்தவும் ஒரு வழியாகும்.

teddy day  wishes

டெடி டே கொண்டாட்டங்கள் காதல் ஜோடிகளுக்கு மட்டும் அல்ல. நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் கூட இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர். நட்பு, ஆதரவு மற்றும் தோழமையின் அடையாளமாகக் டெடி பியர்களை பரிமாறிக் கொள்கிறார்கள். இந்த அன்பான பரிசு முகத்தில் புன்னகையையும், இதயங்களில் அரவணைப்பையும் கொண்டு வருகின்றன. இந்த நாளில் காதலிக்கு அனுப்ப வேண்டிய கவிதைகள், வாழ்த்துகள் இங்கே...

மேலும் படிங்கஓ ஹோ! டெடி பொம்மை கொடுத்து காதலியை வசப்படுத்தலாமா ?

இது வெறும் பொம்மை அல்ல பிரிந்து வாழும் நேரத்தில் ஆறுதல் தொலைதூரக் காதலின் அரவணைப்பு... இரவு உறக்கத்தின் தலையணை வாதம் இல்லாத பேச்சுக்களை உன்னிடம் வெளிக்காட்டமுடியாத என் கோவத்தை தாங்கும் குத்துப் பை... உனக்கு கிடைக்கப்பெறாத என் முத்தங்களை ஏந்தும் நகல்... நீயில்லாத நேரங்களை அழகாக்கும் டெடி பியர் வெறும் பொம்மை இல்லை என் பேரன்பின் பிம்பம் தான்...!

அன்பு பல்வேறு வடிவங்களில் வரலாம்... ஆனால் உண்மையான அன்பு என்பது உருவத்தில் அல்ல உள்ளத்தில் இருந்து வரும். இனிய டெடி டே வாழ்த்துகள்

ஊரில் உள்ள டெடிகளுக்கெல்லாம்... உன்மேல் சிறிய வருத்தம்... ஒரு முறையாவது அவற்றை கட்டி அணைக்க மாட்டாயென!

நீ என்னோடு இல்லாத நாட்களில்... நீ கொடுத்த இந்த டெடி தான் என்னை ஆறுதல் படுத்துகிறது..! இனிய டெடி டே

உனக்கு டெடி என்ற பொம்மையைப் பரிசாக கொடுக்க விருப்பம் இல்லை. நானே டெடியாக கடைசி வரை உன் அரவணைப்பில் இருக்க ஆசைப்படுகிறேன்.

எப்போதும் பிரியமாக அணைத்துக் கொள்கிறாயா? உனக்காக டெடி பொம்மையாகப் பிறந்து விடுகிறேன்.

நீ அடித்து விளையாடினாலும் அழாமல் சிரிக்கும் டெடி பொம்மை நான்... டெடி டே வாழ்த்துகள் என் அன்பே!

அழகிய பொம்மை என நினைத்து கண் சிமிட்டால் பார்த்து கொண்டிருந்தே. நீ கண் சிமிட்டிய நொடியில் கண் சிமிட்டா பொம்மையானேன் நான்...!

கன்னிப் பெண்களின் காதல் மன்னனான டெடி பியர் பொம்மையை உனக்கு பரிசளித்து மன்னனாக விரும்புகிறேன்... புரிந்து கொள்வாயா? என் காதலை

மேலும் படிங்ககாதலியிடம் பகிர வேண்டிய சாக்லேட் தின கவிதைகள்!

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP