Chocolate Day wishes : காதலியிடம் பகிர வேண்டிய சாக்லேட் தின கவிதைகள்!

சாக்லேட் தினத்தை மறக்க முடியாத கொண்டாட்டமாக மாற்றிட அன்புக்குரியவரிடம் இதயப்பூர்வமான வாழ்த்துகளைப் பகிருங்கள்.

chocolate day greetings

சாக்லேட் அனைத்து வயதினராலும் விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பாகும். இந்த சிறப்பு நாளில் மகிழ்ச்சி, கொண்டாட்டத்தின் சின்னமாக சாக்லேட் கலாச்சார எல்லைகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கிறது. உங்கள் அன்புக்குரியவரை ஆச்சரியப்படுத்த நீங்கள் திட்டமிட்டிருந்தால் நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய வாழ்த்துகள், கவிதைகள் இங்கே...

chocolate day quotes

நீ கொடுத்த இனிப்பை நம் வாழ்க்கையின் இனிப்பான தொடக்கமாக எண்ணி காத்து கொண்டிருக்கிறேன்... என்றும் உன் இனிப்பான நினைவுகளுடன்...

சாக்லேட் உனக்கு மிகவும் பிடித்ததுதான் மிச்சம் ஏதுமின்றி மொத்தமுமாக சுவைத்துக்கொள்... இதழுடன் சேர்த்து முத்தமாக நான் ருசித்துக் கொள்கிறேன்...

முன்பெல்லாம் சாக்லேட் நெகிழியை தூக்கி எறிந்த நான் இன்று ஏனோ அதை பணம் போல சேமித்து வைக்கிறேன்...

உன்னோடு பகிரும் போது மட்டும் தான் சாக்லேட்டும் கூட எனக்கு இனிக்கிறது

காலங்கள் கடந்தாலும் இன்னமும் அப்படியே மணம் வீசுகிறது... நான் சேமித்து வைத்த சாக்லேட் தாளில் உன் இதழின் வாசம்.

சுவை குறையாத உன் காதலுக்கு முன்னால் உண்டவுடன் கரைந்து போகும் சாக்லேட் எப்படி ஈடாகும்... எனினும் இனிப்போடு துவங்குவோம் நம் தீரா காதலை

எங்கெங்கோ தேடி பார்த்தும் உன்னை விட இனிப்பான

சாக்லேட்டை தேடி பிடிக்க முடியவில்லை என் காதலியே...

இந்த சிறப்பு நாளில் உலகில் உள்ள அனைத்து சாக்லேட்களையும் உனக்காகப் பரிசளிக்கிறேன். வா என்னுடன் வாழ்கையை என்றென்றும் ஒன்றாகக் கொண்டாடி மகிழலாம்.

இனி எப்போதும் நாம் சாக்லேட்டைப் பகிராமல் சாப்பிட வாய்ப்பில்லை. இனிய சாக்லேட் தின வாழ்த்துக்கள். உன்னை மகிழ்ச்சியாகவும் புன்னகையுடனும் வைத்திருக்க இதோ என்னுடைய காதல் சாக்லேட்.

சாக்லேட்டுகளைப் போல என் வாழ்க்கையை இனிமையாகவும் அன்பாகவும் மாற்றியவள் நீயே ! இனிய சாக்லேட் தின வாழ்த்துக்கள்

வெறும் சொற்களால் வெளிப்படுத்தும் வார்த்தைகளை சாக்லேட் மிகவும் இனிமையானது. சாக்லேட் தினத்தில் எனது அன்பான வாழ்த்துகளை உன்னிடம் தெரிவிக்கிறேன்

இந்த சாக்லேட்டை உன்னிடம் பகிரும் போது மட்டுமே மேலும் சுவையாகின்றது. இனிய சாக்லேட் தின வாழ்த்துகள்

இன்று சாக்லேட் தினம், நான் உன்னுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து வாழ்க்கை துணையாக பயணிக்க வேண்டும் என்பதை சொல்ல இதுவே சரியான தருணம். ஐ லவ் யூ !

இந்த சாக்லேட்டை உனக்கு மகிழ்ச்சியை தருவது போல, நீ என் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தருவாய் என நம்புகிறேன். இனிய சாக்லேட் தின வாழ்த்துகள்

என்னுடைய வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் இனிமையாக்கும் என்னவளுக்கு சாக்லேட் தின வாழ்த்துகள்.

மேலும் படிங்ககாதலிக்கு சாக்லேட் கொடுப்பதன் பின்னணி தெரியுமா?

இது போன்ற காதலர் வார சிறப்பு கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP