சுதீஷ் சங்கர் இயக்கத்தில் பஹத் பாசில், வடிவேலு நடிப்பில் ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் மாரீசன் படம் வெளியாகியுள்ளது. விவேக் பிரசன்னா, கோவை சரளா, லிவிங்ஸ்டன் இந்த படத்தில் நடித்துள்ளனர். மாமன்னன் படத்திற்கு பிறகு பஹத் பாசில் வடிவேலு இணைந்து நடித்துள்ளனர். மாரீசன் படம் எப்படி இருக்கிறது வாருங்கள் பார்ப்போம்.
மாரீசன் கதைச் சுருக்கம்
மறதி நோய் கொண்ட வடிவேலுவிடம் 25 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடிக்க பஹத் பாசில் திட்டமிடுகிறார். பஹத் பாசிலின் ஆசையில் பெரிய திருப்பம் காத்திருக்கிறது. பஹத் பாசில் வடிவேலுவை ஏமாற்றினாரா ? என்ன நடந்தது என்பதே மாரீசன்.
மாரீசன் விமர்சனம்
திருட சென்ற இடத்தில் வடிவேலுவை பணத்திற்காக பஹத் பாசில் மீட்கிறார். ஏடிஎம்-ல் வடிவேலு பணம் எடுக்கும் போது அவரது கணக்கில் 25 லட்சம் ரூபாய் இருப்பதை கண்டுபிடிக்கிறார். வடிவேலுவிற்கு மறதி நோய் என்பதால் அவரிடம் இருந்து 25 லட்சம் ரூபாயை லாவகமாக கொள்ளையடிக்க பஹத் பாசில் நினைக்கிறார். இருவரும் நீண்ட நெடிய இருசக்கர வாகன பயணத்தை தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் வடிவேலுவை பற்றி மிகப்பெரிய உண்மை பஹத் பாசிலுக்கு தெரிய வருகிறது. யார் வைத்த எலி பொரியில் யார் சிக்கியது ? என முதல் பாதியில் யதார்த்தமாகவும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாகவும் இரண்டரை மணி நேர படமெடுத்துள்ளனர்.
மாரீசன் படத்தின் பாஸிட்டிவ்ஸ்
- வைகைப் புயல் வடிவேலு, பஹத் பாசிலின் நடிப்பை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் கச்சிதமாக நடித்துள்ளனர்.
- மறதி நோயால் வடிவேலு வறுத்தப்படும் இடங்களிலும், பாவப்பட்டு திருந்திவிடலாம் என பஹத் பாசில் நினைக்கும் இடங்களிலும் நம் மனதை வருடுகின்றனர்.
- முதல் பாதி வேறு கதை, இரண்டாம் பாதி கதை போல காண்பித்தாலும் ஒருங்கிணைப்பு காட்சிகள் நன்றாக இருந்தது.
- வடிவேலுவை பற்றி பஹத் பாசில் உண்மையைக் கண்டறியும் காட்சிகள் தரம்.
- படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள், பின்னணி இசை திருப்திகரமான மீட்டரில் உள்ளது.
மாரீசன் படத்தின் நெகட்டிவ்ஸ்
- இருவரும் பயணத்தில் பேசி பழகினாலும் அழுத்தமான பிணைப்பு இல்லாதது போல் தோன்றுகிறது.
- சில நீண்ட காட்சிகளை நீக்கியிருந்தால் இரண்டு மணி நேரத்தில் விறுவிறுப்பான படமாக அமைந்திருக்கும்.
- சிறுமியின் தற்கொலையை காவல்துறை முழுமையாக விசாரிக்க தவறியது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
- கொலை சம்பவங்களில் காவல்துறையின் விசாரணை காட்சிகள் சற்று சொதப்பல்.
மாரீசன் ரேட்டிங் - 3 / 5
மேலும் படிங்கதலைவன் தலைவி விமர்சனம் : மெகா பட்ஜெட்டில் கலகலப்பான கணவன் மனைவி சீரியல்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கிற்கு சென்றால் நல்ல படம் பார்த்த அனுபவத்தோடு வெளியே வரலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation