herzindagi
image

மாதவிடாய் வலியை குறைக்கும் இயற்கை பானம்; வெறும் வயிற்றில் குடித்து பாருங்க

மாதவிடாய் நாட்களில் இந்த வலியை குறைக்க பலரும் மாத்திரை மருந்துகள் சாப்பிடுவது உண்டு. ஆனால் அடிக்கடி மாத்திரை மருந்துகள் சாப்பிடுவது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். 
Editorial
Updated:- 2025-07-10, 16:43 IST

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பலருக்கும் அதிக வயிற்று வலி ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு இந்த மாதவிடாய் இரத்தப்போக்கு ஹார்மோன் சமநிலை இல்லாத காரணத்தால் அதிகமாகும். அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதால் வலியும் அதிகரிக்கும். குறிப்பாக 23 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் வருவது அல்லது ஏழு நாட்களுக்கு மேல் ரத்தப்போக்கு இருப்பது இந்த வலியை அதிகரிக்கும் முக்கிய காரணங்கள் ஆகும். மாதவிடாய் நாட்களில் இந்த வலியை குறைக்க பலரும் மாத்திரை மருந்துகள் சாப்பிடுவது உண்டு. ஆனால் அடிக்கடி மாத்திரை மருந்துகள் சாப்பிடுவது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். பலருக்கும் இது ஒரு சவாலான காலமாக இருக்கும். அந்த வரிசையில் இயற்கை முறையில் மாதவிடாய் வலியை குறைக்க என்ன செய்யலாம் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

 

  • முருங்கை இலை - கைப்பிடி அளவு
  • தேன் - ஒரு டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - கால் கப்

moringa water

செய்வது எப்படி?


முருங்கை இலையில் கால் கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதன் சாற்றை பிழிந்து எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும். இதை நன்றாக கலந்து மாதவிடாய் காலங்களில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மாதவிடாய் வலி குறையும்.

periods

முருங்கை இலை நன்மைகள்:


முருங்கை இலையில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. நம் உடலுக்கு தேவையான கால்சியம் மினரல் போன்ற ஊட்டச்சத்துக்களும் இந்த முருங்கை இலையில் நிறைந்துள்ளது. இது பெண்களின் கர்ப்பப்பை ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த மூலிகை. குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ரத்த சோகை ஏற்படாமல் உடலை பராமரிக்க உதவும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:


காபி பானங்கள்:


காபி, டீ மற்றும் எனர்ஜி டிரிங்க்ஸ் போன்ற கஃபின் (Caffeine) நிறைந்த பானங்களை மாதவிடாய் நாட்களில் தவிர்க்க வேண்டும். கஃபின் உடலில் நீர்ச்சத்தை குறைத்து, தலைவலி மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும், இது எரிச்சல் மற்றும் கோபத்தை தூண்டும். எனவே, இந்த காலத்தில் தண்ணீர், ஹெர்பல் டீ அல்லது சூடான பால் போன்றவற்றை குடிப்பது நல்லது.

மேலும் படிக்க: மாதவிடாய் ரத்தம் கருப்பு நிறத்தில் வருகிறதா? இதை குணப்படுத்த என்ன செய்யலாம்?

உப்பு மற்றும் பாக்கெட் உணவுகள்:


சிப்ஸ், பிரைஸ், ஃபாஸ்ட் ஃபுட்ஸ் போன்ற உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக உப்பு உடலில் நீர் தங்குதலை ஏற்படுத்தி, வீக்கம் மற்றும் மூட்டு வலியை அதிகரிக்கும். எனவே, காரம் மற்றும் மசாலா குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

Image credits: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]