இன்றைய காலகட்டத்தில் தலைமுடி உதிர்வது என்பது மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு, தண்ணீர், அதிக ரசாயனம் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது. இந்த மாதிரியான சமயங்களில் ரசாயன பொருட்களை பயன்படுத்தாமல், இயற்கை வழிமுறைகளை பின்பற்றலாம் என்று பலர் கருதுகின்றனர்.
மேலும் படிக்க: Benefits of almonds: சருமத்தை பொலிவாக்கும்; எலும்புகளை வலுப்படுத்தும் - ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்
முடி வளர்ச்சிக்கு உதவும் இயற்கையான பொருட்களில், முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. முருங்கையின் இலைகள், காய்கள், பூக்கள், விதைகள் என அனைத்தும் முடி ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. இதில், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் சின்க் சத்துகள் அதிகம் உள்ளன. தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி உதிர்வை தடுக்கவும் முருங்கை உதவுகிறது. அந்த வகையில் முருங்கையை பயன்படுத்தி எப்படி முடியை ஆரோக்கியமாக பராமரிக்கலாம் என்று பார்ப்போம்.
இதில் புரதச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துகளின் நன்மைகள் அதிகமாக இருக்கும். இதற்காக 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் ஷியா மற்றும் பாதாம் எண்ணெய், 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய், முருங்கை பொடி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில், ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், ஷியா, பாதாம் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து அதனை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து சூடாக்கவும். பின், ஒரு டேபிள் ஸ்பூன் முருங்கை பொடியை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த எண்ணெய் கலவை குளிர்ந்த பிறகு, ஒரு பாட்டிலில் மாற்றி, வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு ஷாம்பு போடுவதற்கு முன்பு தடவலாம்.
இந்த முருங்கை எண்ணெய் கலவையை தலைக்கு ஷாம்பு போடுவதற்கு முன்பு தடவி, மாஸ்க் போல பயன்படுத்தலாம். இது தவிர 2 டேபிள் ஸ்பூன் முருங்கை பொடியுடன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும். அதனுடன், சிறிதளவு கற்றாழை ஜெல் அல்லது தேன் சேர்த்து, தலை மற்றும் முடியின் வேர்களில் தடவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்வதன் மூலம் நல்ல பலன்களை காணலாம். பின்னர், ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு முடியை அலசி வந்தால், சில வாரங்களிலேயே முடி உதிர்வு குறைவதை நீங்கள் காணலாம்.
மேலும் படிக்க: இளமையான தோற்றத்தை அளிக்கும் கொலஜன் நிறைந்த உணவுகள்; சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த இவற்றை சாப்பிடவும்
கோடைக்காலத்தில் அதிக வியர்வை காரணமாக தலையில் எண்ணெய் பசை அதிகமாகும். இதனால், அரிப்பு, பொடுகு மற்றும் தூசு சேர்வது போன்ற பிரச்சனைகள் வரலாம். இது முடியின் வேர்களை பலவீனப்படுத்தி, முடி உதிர்வை ஏற்படுத்தும். இதிலிருந்து விடுபட, 2 டேபிள் ஸ்பூன் முருங்கை பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து மாஸ்க் போல பயன்படுத்தவும். இந்த மாஸ்க், எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தி, பொடுகு பிரச்சனைகளை குறைக்கும்.
ஹேர் மாஸ்க் உங்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்தையும், வலிமையையும் தரும். முருங்கை பொடியுடன் கலந்த தேன் ஹேர் மாஸ்க், தலைமுடிக்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். முருங்கை பொடியுடன், அரை கப் தேன், 1 கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், இந்த கலவையை முடி முழுவதும் தடவி, ஒரு துண்டை வெந்நீரில் நனைத்து தலையைச் சுற்றவும். 10 நிமிடங்கள் கழித்து, குளித்து பார்த்தால் பளபளப்பான மற்றும் பட்டு போன்ற முடியை பெறுவீர்கள்.
காலையில் நீங்கள் அருந்தும் முருங்கை தேநீரை முடிக்கு பயன்படுத்தலாம். முருங்கை இலைகளை நன்கு கொதிக்க வைத்து, ஆற வைத்து, ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இதை தலைமுடி மற்றும் வேர்களில் தடவவும். 15-20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் அலசினால், தலைமுடி உறுதியாகவும், நீளமாகவும், பளபளப்பாகவும் மாறும்.
அந்த வகையில் முருங்கையை இது போன்று பயன்படுத்தும் போது நம்முடைய தலை முடியை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]