ஒவ்வொரு மாதமும் பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை மாதவிடாய் சுழற்சி. சில பெண்களுக்கு இந்த மாதவிடாய் 28 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படும். இன்னும் சிலருக்கு 21 நாட்கள் இடைவேளையில் வரும். இந்த மாதவிடாய் காலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடும். சில பெண்களுக்கு நான்கு நாட்கள் மாதவிடாய் நீடிக்கலாம் மற்றும் சிலருக்கு ஏழு நாட்களுக்கு மேல் மாதவிடாய் இருக்கும். பொதுவாக இந்த மாதவிடாய் நாட்களில் ரத்தம் கெட்டியாக வெளிவருவது, பிரவுன் நிறத்தில் ரத்தம், கருப்பு நிறத்தில் ரத்தம் போன்றவை பலரும் சந்திக்கும் ஒரு உடல்நல பிரச்சனை. அந்த வரிசையில் மாதவிடாய் நாட்களில் ரத்தம் கருப்பு நிறத்தில் வெளிவருவதன் காரணம் மற்றும் அதை குணப்படுத்த வீட்டு வைத்தியம் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கருப்பு நிறத்தில் ரத்தம்:
உங்கள் மாதவிடாயின் முதல் நாளில் பிரவுன் நிறத்தில் அல்லது கருப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுவது பொதுவான ஒரு விஷயம் தான். இது உங்கள் கருப்பையில் இருக்கும் பழைய ரத்தம். மாதவிடாய் சுழற்சியின் தொடக்கத்தில் அல்லது முடிவில் இது வெளிவரும். ஆனால் ஒரு சில நேரங்களில் இந்த பிரவுன் நிறம் அல்லது கருப்பு நிற ரத்தம் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம் அல்லது பிறப்புறுப்பு தொற்று நோய்களின் காரணமாகவும் இருக்கலாம். சில சமயங்களில் கருச்சிதைவு ஏற்படும் போது உங்களுக்கு கருப்பு நிற ரத்தப்போக்கு ஏற்படலாம். கருப்பை பலவீனமாகவோ அல்லது கருப்பை சுவர் மெலிதாக இருந்தால் கூட இது போன்ற கருப்பு நிறம் அல்லது பிரவுன் நிறத்தில் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதை வீட்டில் இருந்தபடி குணப்படுத்த கருப்பையின் வலிமையை அதிகரிக்கும் சில வைத்தியங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
கருப்பட்டி வைத்தியம்:
முதலில் சிறிதளவு கருப்பட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கருப்பட்டியில் அரை டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகத்தை சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நல்லெண்ணெய் சேர்த்து மாதவிடாய் காலத்தில் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு கருப்பு நிறம் அல்லது பிரவுன் நிறத்தில் ரத்தப்போக்கு வெளியேறுவதை தடுக்கலாம். குறிப்பாக இதை தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் உங்கள் கருப்பையின் வலிமையும் அதிகரித்து ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் குணமாகும்.
உப்பு நீர்:
மற்றொரு பயனுள்ள வீட்டு வைத்தியம் வெதுவெதுப்பான ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதை தினமும் மூன்று வேலை காலை மதியம் இரவு என குடித்து வந்தால் மாதவிடாய் நாட்களில் கெட்டியாக ரத்தம் வெளிவருவதை தடுக்கலாம்.
குங்கமப்பூ பால்:
உங்கள் கருப்பை சுவர் வலிமையாக தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு கப் பாலில் இரண்டு அல்லது மூன்று சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இது உங்கள் கருப்பையை வலிமையாக்கி கருப்பையில் மீதமுள்ள ரத்தத்தை எளிதில் வெளியேற்றி விடும்.
இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்தும் மாதவிடாய் காலத்தில் கருப்பு நிற ரத்தப்போக்கு பிரச்சனை தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation