மாதவிடாய் காலங்களில் பெரும்பாலான பெண்கள் பேட்களை (நாப்கின்ஸ்) பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒரு நாளில் எத்தனை முறை இதை மாற்ற வேண்டும் என்பதே இங்கு பலருக்கும் இருக்கும் சந்தேகம். ஒரு சில பெண்கள் பேட் முழுவதுமாக ஈரமாகும் வரை மாற்றுவதில்லை. இன்னும் சிலர் இரவு படுக்கச் செல்லும் போது வைக்கும் பேடை அடுத்த நாள் குளிப்பதற்கு முன் மாற்றுவதே இல்லை. இது மிகவும் தவறான பழக்கம். மாதவிடாய் காலத்தில் இரத்த ஓட்டம் அதிகமாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு 4 முதல் 6 மணி நேரத்திற்குள் பேடை கண்டிப்பாக மாற்ற வேண்டும். இந்த வழிமுறையை பின்பற்றாத போது தோல் அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வரிசையில் மாதவிடாய் நாட்களில் எப்போது பேட் மாற்ற வேண்டும் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தற்போது சந்தையில் பலவகையான பேட்கள் கிடைக்கின்றன. ரசாயன கலப்புடையவை, நறுமணம் சேர்க்கப்பட்டவை, செயற்கை இழைகளால் (சிந்தெட்டிக்) செய்யப்பட்டவை என்று பல பேட்கள் உள்ளது. இவற்றில் வாசனையற்ற காட்டன் பேட்களை பயன்படுத்துவதே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாகும். இவை தோல் எரிச்சல் மற்றும் அலர்ஜி ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கின்றது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஏன் பேட் மாற்ற வேண்டும்?
மாதவிடாய் இரத்தத்தில் பாக்டீரியாக்கள் விரைவாக பெருகும் சூழ்நிலை உள்ளது. நீண்ட நேரம் ஒரே பேடை அணிந்திருந்தால், அது ஈரப்பதத்தை ஏற்படுத்தி தோல் எரிச்சல், சரும பிரச்சினைகள் மற்றும் யோனி தொற்றுகளை உருவாக்கும். எனவே, நேரம் தவறாமல் பேட் மாற்றுவது அவசியம்.
எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?
பொதுவாக, 4 - 6 மணி நேரத்திற்கு ஒருமுறை பேட் மாற்றுவது நல்லது. இரத்த ஓட்டம் சாதாரணமாக இருக்கும் நாட்களில் (2வது அல்லது 3வது நாள்) இந்த இடைவெளி போதுமானதாக இருக்கும். இருப்பினும், தனிப்பட்ட இரத்த ஓட்டம் நிலையை பொறுத்து இது மாறுபடலாம்.
அதிக ரத்த ஓட்டம் இருக்கும் போது என்ன செய்வது?
மாதவிடாயின் முதல் மற்றும் இரண்டாம் நாளில் அதிக ரத்த ஓட்டம் இருந்தால், 3 - 4 மணி நேரத்திற்கு ஒருமுறை பேட் மாற்ற வேண்டும். இரத்தம் தேங்கி விடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். இரவு நேரத்தில் நீண்ட நேரம் தூங்க வேண்டியிருந்தால், "நைட் பேட்" போன்ற தடிமனான மற்றும் நீண்ட xl அல்லது xxl சைஸ் பேட்களை பயன்படுத்தலாம்.
கடைசி நாட்களில் பேட் மாற்றும் முறை:
மாதவிடாயின் கடைசி 2 நாட்களில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் 6 - 8 மணி நேரத்திற்கு ஒருமுறை பேட் மாற்றினால் போதுமானது. ஆனால், நீங்கள் ஈரப்பதம் உணர்ந்தால் உடனே மாற்றுவது நல்லது.
பேட் மாற்றும் போது கவனிக்க வேண்டியவை:
- பேட் மாற்றுவதற்கு முன்பும் பின்னரும் கைகளை நன்றாக கழுவவும்
- ஈரமான பேட்களை உடனே மாற்றவும்
- உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், வாசனை இல்லாத பேட்களை தேர்ந்தெடுக்கவும்
- சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நீங்கள் பயன்படுத்திய பேட்களை சரியாக மூடி தூக்கி எறியவும்
மாதவிடாய் காலத்தில் சரியான நேரத்தில் பேட் மாற்றுவது பெண்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. குறைந்தது 4 - 6 மணி நேரத்திற்கு ஒருமுறை பேட் மாற்றுவது, தொற்றுகள் மற்றும் தோல் பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கும். உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப நேரத்தை சரிசெய்யலாம், ஆனால் 8 மணி நேரத்திற்கு மேல் ஒரே பேட் அணியக்கூடாது.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation