Hug Day wishes : தூரத்தில் இருந்தாலும் ஹக் தினத்தில் காதலியை கட்டிப்பிடிக்கலாம்!

தூரத்தில் இருந்தாலும் காதலியை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியடைய வேண்டும் என ஆசையா ? அதற்கான எளிய வழிகள் இங்கே…

hug day messages

உடல் ரீதியான தொடுதலின் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பும் நபர்களுக்கு ஹக் டே சிறப்பு வாய்ப்பாகும். இந்த நாள் நம் வாழ்வில் அரவணைப்பின் அவசியத்தை நினைவூட்டுகிறது. ஒவருரை அரவணைப்பதால் ஆறுதல், அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியும். மேலும் கட்டிப்பிடிப்பது மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்கும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது. இது அன்பின் எளிய வெளிப்பாடாக இருந்தாலும் ஒருவரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரு எளிய அரவணைப்பு உறவில் ஏற்பட்ட காயத்தை ஆறுதல்படுத்தி மீண்டும் அந்த உறவை புதுப்பிக்க பெரிதும் உதவும். இந்த நாளை உங்கள் அன்புக்குரியவர்களைக் கட்டிப்பிடிப்பதன் மூலம் தொடங்கலாம். பின்னர், அவர்களை சிரிக்க வைக்க நீங்கள் அவர்களுக்குப் பரிசுகளையும் பூக்களையும் கொடுக்கலாம். நீங்கள் இருவரும் தூரத்தில் இருந்தாலும் ஹக் டே கொண்டாடுவதற்கான வாழ்த்துகள், கவிதைகள் இங்கே உள்ளன

hug day  valentines week

உன் மார்பில் சாயும் ஸ்பரிசம் சொர்க்கமாக்கியது... அந்த சொர்ப்ப நிமிடங்கள் இன்னும் நீளக்கூடாதா... கண்கள் மூடியே புது உலகில் இப்படியே உயிர் பிரியட்டும்!

என் வாழ்நாளில் எல்லா பகலையும்... உன் கைப்பிடித்து உலகம் சுற்ற ஆசை... எல்லா இரவையும் உன்னைக் கட்டிப்பிடித்து உறங்க ஆசை

இந்த உலகில் எல்லா வலிகளுக்கும் பொதுவான ஒரே மருந்து நாம் நேசிப்பவர்களின் அரவணப்பு மட்டும் தான்...

அணைத்துக்கொண்டு அருகில் இருப்பதும்... காதல் தான் நினைத்துக்கொண்டு தொலைவில் இருப்பதும்... காதல் தான்

ஆறுதலாய் ஒரு வார்த்தை! மெளனமாய் ஒரு முத்தம்! அன்பாய் ஒரு அரவணைப்பு! இது போதும் எனக்கு!

கழுத்தோரம் காதல் பேச... காதோரம் கவிதை சொல்ல... மார்போடு சாய்ந்து கொள்ள உன் அருகே... நானும் தொலைவேனே உனது அன்பால்...!

நீ கட்டிப்பிடி வைத்தியம் செய்ய நினைத்தாய்... ஆனால் அது என்னை பைத்தியமாகத் தான் ஆக்கியது உன் மேல்...!

மனதுக்கு பிடித்த ஒருவரின் அரவணைப்பு ஒன்று போதும் நம் கவலைகளை மறக்க வைக்க!

அரவணைப்பு மௌனமானதாக இருக்கலாம் ஆனால் அவை ஆழமான வார்த்தைகளை பேசுகின்றன...

ஒவ்வொரு முறை கட்டிப்பிடிக்கும் போதும் இதுவே எனக்கான கடைசி வாய்ப்பென என்று நினைக்கிறேன்... என் ஆழமான அன்பை வெளிப்படுத்த...

ஒரு எளிய அரவணைப்பில் நிறைய பேச முடியும். இந்த அரவணைப்பு நாளில் இணைப்பின் சக்தியைக் கொண்டாடுவோம், அன்பைப் பரப்புவோம்.

ஹக் டே அன்று தூரத்தில் இருந்தாலும் உன்னை ஆரத்தழுவி அரவணைக்க விரும்புகிறேன். இது நான் உன் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும்...

நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நினைவூட்டுவதற்கு ஒரு மென்மையான அரவணைப்பைக் கொடுக்க விரும்புகிறேன். அரவணைப்பு தின வாழ்த்துக்கள்...

மேலும் படிங்ககாதலியை கட்டிப்பிடித்தால் அதிகரிக்கும் காதல் ஹார்மோன்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP