அரவணைப்பு நாள் என்று அழைக்கப்படும் ஹக் டே காதலர் வாரத்தில் பிப்ரவரி 12ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. கட்டிப்பிடிப்பது பண்டைய காலங்களில் இருந்தே இருக்கிறது. பாசம், அக்கறை மற்றும் உணர்வை வெளிப்படுத்த கட்டிப்பிடிப்பது பொதுவான வழியாகும். ஒருவரின் கைகளை மற்றொருவர் மீது சுற்றிக் கொள்ளும் எளிய செயல் நேசத்தின் அடையாளமாக உருவெடுத்துள்ளது.
ஹக் டே
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12ஆம் தேதி ஹக் டே எனும் கட்டிப்பிடி தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் வாரத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாட்களில் இதுவும் ஒன்றாகும். ஏனெனில் காதல் எப்படி தனிமையைக் குறைக்கும் என்ற மொழியைப் இது பரப்புகிறது.
ஹக் டே வரலாறு
கட்டிப்பிடி தினம் என்பது காதலர் வாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உருவானது. பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்துவதில் உடல் ரீதியான தொடுதல் அல்லது அரவணைப்பின் அர்த்தத்தை கொண்டாடுவதற்கான ஒரு வழியாகும். இது உறவுகளை வளர்ப்பதிலும் உடல் ரீதியான தொடுதலின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. இதனால் கட்டிப்பிடி தினத்தின் சரியான தோற்றம் குறித்த தரவு தெளிவாக இல்லை.
இது நவீன காதலர் வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பிரபலமடைந்தது. வெளிநாடுகளில் மக்கள் அடிக்கடி அணைத்துக்கொள்கிறார்கள். தங்கள் அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் அந்நியர்களுடன் கூட நல்லெண்ணம் மற்றும் கருணையின் வெளிப்பாடாக ஹக் டே பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்ககாதலியிடம் தவறாமல் செய்ய வேண்டிய ப்ராமிஸ் !
முக்கியத்துவம்
ஹக் டே என்பது ஒருவரையொருவர் அன்பில் அரவணைப்பதன் முக்கியத்துவத்தை கொண்டாடுகிறது. இது காதலர்கள் மற்றும் தம்பதிகளுக்கானது மட்டுமல்ல. அரவணைப்பு தினத்தை அனைவரும் கொண்டாடலாம். இதில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விரும்பும் நபரை சென்று கட்டிப்பிடிப்பது மட்டுமே. இதில் குடும்ப உறவுகள் அல்லது நண்பர்கள் கூட இருக்கலாம். கட்டியணைப்பது என்பது எதைவும் பேசாமல் நிறையவற்றை விவரிக்க முடியும் மற்றும் ஒருவரையொருவர் அரவணைத்து மற்ற நபருக்கு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைக்கிறது.
நீண்ட நேரம் அரவணைக்கும் போது மூளையில் இருந்து ஆக்ஸிடாசின் என்ற மகிழ்ச்சி ரசாயனத்தை வெளியிடுகிறது. இது உடனடியாக ஒருவரின் மனநிலையை உயர்த்தி மகிழ்ச்சியடையச் செய்யும். கட்டிப்பிடிப்பது அன்பையும் பாசத்தையும் கொண்டாடுகிறது. எனவே நீங்கள் விரும்பும் நபரை அவர்களது விருப்பத்துடன் தாராளமாக கட்டிபிடிக்கலாம். அதிலும் உங்களிடம் வெளிப்படுத்த சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை அவர்களை நீண்ட நேரம் அணைத்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிங்ககாதலர் வாரம் தொடக்கம்! ரோஸ் டே முதல் கிஸ் டே வரை அன்பின் வெளிப்பாடு
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நம்மை நேசிக்கக்கூடிய ஒருவரைக் கட்டிப்பிடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களையும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் நேசிக்கக் கற்றுக்கொள்வற்கு ஹக் டே சிறந்த வாய்ப்பாகும்.
காதலர் வார சிறப்பு கதைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்...
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation