Promise Day Wishes : காதலியிடம் தவறாமல் செய்ய வேண்டிய ப்ராமிஸ் !

காதலின் ஆணிவேராக இருக்கும் நம்பிக்கைக்கு கூடுதல் வலுசேர்க்க இந்த நாளில் காதலியிடம் வாழ்நாள் பயணத்திற்கான ப்ராமிஸ் செய்யுங்கள்.

promise day messages in valentines week

இந்த 2024ஆம் ஆண்டு பிராமிஸ் டே-வில் அன்பு, நம்பிக்கை மற்றும் நீடித்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் இதயப்பூர்வமான வாழ்த்துகள், குறுஞ்செய்திகளை உங்கள் காதல் உறவிடம் பகிருங்கள். காதலி, மனைவி, நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருடன் ப்ராமிஸ் டே கொண்டாடினாலும் இருவரிடையே உள்ள உணர்வுகள் கண்டிப்பாக எதிரொலிக்கும் மற்றும் பாசத்தின் பிணைப்பை ஆழமாக்குகின்றன. நீங்கள் காட்டும் பாசமும் செய்யும் சத்தியமும் இந்த நாளில் அன்பையும் நம்பிக்கையையும் வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. எனவே இந்த நாளின் சாராம்சத்தை உணர்ந்து அன்பை வெளிப்படுத்த இதயப்பூர்வமான வாழ்த்துக்களை பகிர்வதில் கவனம் செலுத்துவோம்.

இதயப்பூர்வமான அன்புடனும், உறுதியான சத்தியத்துடனும் ப்ராமிஸ் டே அன்பின் கலங்கரை விளக்கமாக வெளிப்படுகிறது.இது பாசம் மற்றும் நம்பிக்கையின் செழுமையால் அலங்கரிக்கப்பட்ட எதிர்காலத்தை நோக்கிய பாதையை ஒளிரச் செய்கிறது.

promise day captions

ஆசைக்காக இல்லை உன் அன்புக்காக கை பிடித்து விட்டேன்! இனி என் உயிரே போனாலும் உன்னை விட மாட்டேன்...

வாழுற வரைக்கும் உனக்கு உண்மையா இருப்பேன்... சாகுற வரைக்கும் உன்மேல உயிரா இருப்பேன்..

நீ வந்து தங்கிய இதயத்தில் உன்னைத் தவிர வேறு யாருக்கும் இடம் இல்லை. என்னுடைய காதல் உனக்காக மட்டும் தான்...

சிற்பம் கூட அழிந்துவிடும் சில நூறு ஆண்டுகளில் சிலையே! உன்மீது நான் வைத்த காதல் மட்டும் அழியாது... ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்..!

உண்மையாக நேசிக்கும் உன் போல் ஒரு உறவு இருந்தால் இன்னும் பல ஜென்மம் பிறக்க ஆசை...

ஆயிரம் சண்டைகள் உன்னோடு போட்டாலும்... நீ இல்லாமல் என் வாழ்க்கை இல்லை... இது சத்தியம்

நான் கேட்காமல் எனக்கு கிடைத்த வரம் நீ... இப்பொழுது வரமாக கேட்கிறேன் என்றும்... உன்னை பிரியாத வாழ்க்கை வேண்டும் என்று

நேரம் இருந்தால் என்னை நினைத்து பார் நேரில் வரவில்லை என்றாலும் உன் நினைவில் வருவேன்... என் அன்பே..!

உண்மையான காதலும் ஆழமான அன்பும் உயிரை விட புனிதமான ஒன்று... உயிர் பிரிந்தாலும் இவ்விரண்டையும் யாராலும் பிரிக்க முடியாது..!

மனதோடு மாலையாய் நீ என்னை சூடிக்கொள்... உன் மனதில் உதிராத மலர்களாய் நான் இருப்பேன்...

நீயே கேட்டாலும் விட்டுக் கொடுப்பதாக இல்லை உன் மீதான என் காதலை!

நிழல் கூட வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும்... உண்மையான அன்பு மட்டுமே உயிர் உள்ளவரை துணைக்கு வரும்...

ஆசைக்காக காதலித்து இருந்தால் யாரோ ஒருத்தி என்று விட்டிருப்பேன்... வாழ்க்கைகாக காதலித்தேன் அதனால் தான் இன்னமும் உனக்காக காத்திருக்கிறேன்...

மேலும் படிங்ககாதல் உறவில் அர்ப்பணிப்பை உணரத்தும் ப்ராமிஸ் டே

இது போன்ற காதலர் வார சிறப்பு கதைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP