வாரத்தின் முதல் நாள் திங்களன்று சிவபெருமானை வழிபடுவது மிக சிறப்பு. இன்றைய நாள் ஒவ்வொரு ராசிக்கும் குடும்ப / காதல் வாழ்க்கை, நிதி விஷயம், அலுவலக சூழல், உடல் ஆரோக்கியம் எவ்வாறு அமையும் என்பதை இங்கே கணித்து பகிர்ந்துள்ளோம்.
ஜூலை 14 ராசிபலன், 2025
மேஷம்
உங்கள் துணையிடம் வெளிப்படையாக இருப்பீர்கள். உங்களுடைய நேர்மறை ஆற்றலால் பிறரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். வாழ்க்கைகான முக்கிய விஷயங்களை கற்க ஆரம்பிப்பீர்கள்.
ரிஷபம்
வருவாயை பெருக்கிட முதலீட்டை தொடங்குவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வாழ்க்கையில் நடந்து முடிந்த விஷயங்களை பற்றி யோசிக்க வேண்டாம்.
மிதுனம்
இன்று அலுவலக பணி எளிதாகவே இருக்கும். மன அழுத்தத்தில் சிக்கி இருந்தால் உடனடியாக மனநல ஆலோசகரை நாடவும். உங்களை பற்றி முதலில் நீங்கள் பெருமை கொள்ளுங்கள்.
கடகம்
வாழ்க்கை துணையிடம் விரக்தி உண்டாகலாம். அலுவலக பிரச்னைகளுக்கு பேசி தீர்வு காண்பீர்கள். குடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவில் பார்த்ததை நினைத்து உணர்ச்சிவசப்படாதீர்கள்.
சிம்மம்
தொழில் விஷயத்தில் மகிழ்ச்சிகரமான அழைப்பு வரக்கூடும். உடல்நலன் சீராக இருந்தாலும் மனநலனிலும் கவனம் செலுத்துங்கள். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக அமையும்.
கன்னி
வருவாய் நிச்சயமாக பெருகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கம் காட்டுவீர்கள். உணர்ச்சி வசப்படாமல் அமைதி காக்கவும்.
துலாம்
அலுவலக பணி கடுமையானதாக இருக்கலாம். உதவி கேட்க தயங்காதீர்கள். நிதி விஷயத்தில் நிலைத்தன்மையை எட்டுவீர்கள். முக்கியமான குடும்ப உறுப்பினர் உங்களை சந்தித்து ஆலோசனை பெறலாம்.
விருச்சிகம்
வாழ்க்கை துணையை வெளியே அழைத்து சென்று மகிழவும். வேலை தேடிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். விருப்பமில்லாத விஷயத்தை செய்யாதீர்கள்.
தனுசு
நிதி விஷயத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும். வாழ்க்கை துணையுடன் நேரம் செலவிட்டு மகிழ்வீர்கள். அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்ய நேரிடும். போதுமான நேரம் தூங்குவதை உறுதி செய்யவும். நினைத்தது நடக்க பொறுமை காக்கவும்.
மகரம்
அதிர்ஷ்ட தேவதை உங்கள் கதவை தட்டப்போகிறது. வேலையில் முழு கவனம் செலுத்தவும். யாராவது உங்களுடைய உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசி வருத்தமடையச் செய்யலாம்.
கும்பம்
வேலை விஷயத்தில் நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புண்டு. உடல்நலனில் அக்கறை காட்டவும். தனிமையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.
மீனம்
வாழ்க்கை துணை உங்களை இன்று மிகவும் எதிர்பார்ப்பார்கள். இன்று பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். திறனை வளர்ப்பதில் கூடுதல் நேரம் செலவிடுவீர்கள். நிதி விஷயம் சீராகவே இருக்கும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation