herzindagi
diabetes control by morning walk

Morning Walk for Diabetes : சர்க்கரை நோயாளிகளுக்கு காலை நேர நடைப்பயிற்சி எவ்வளவு முக்கியம் தெரியுமா?

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருப்பதில் உடல் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கான சிறந்த மற்றும் எளிய வழி நடை பயிற்சி செய்வது…
Editorial
Updated:- 2023-05-02, 09:55 IST

உங்கள் ஆரோக்கியம் மற்றும் செயல் திறனை மேம்படுத்த சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழும் பழக்கத்தை கடைபிடிக்கலாம். தூங்குவதற்கான சரியான நேரத்தை கடைபிடிப்பதன் மூலம் உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தையும் ஒதுக்க முடியும்.

நடைப்பயிற்சி செய்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், இருதய நோய் மற்றும் நரம்பு பாதிப்புகளின் அபாயத்தை குறைக்கவும் உதவும். அனைவரும் நடைப்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளில் ஈடுபட முயற்சி செய்யலாம். குறிப்பாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் காலையில் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை தெரிந்து கொள்வோம்.

இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் டயட் பிளான்

சர்க்கரை நோயாளிகள் ஏன் காலையில் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்?

walking and diabetes

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் பொழுது சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இன்சுலின் எனும் ஹார்மோனின் சமநிலையின்மையால் அல்லது இன்சுலின் எதிர்பால் ஏற்படுகிறது. இது குளுக்கோஸை ஆற்றலாக மாற்றும் உடலின் திறனைப் பாதிக்கிறது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் அதிகரிக்கின்றன.

எந்தவொரு உடல் செயல்பாடுகளை செய்யும் பொழுதும் உடல் குளுக்கோஸை ஆற்றலாக மாற்றி பயன்படுத்தும். இயற்கையாகவே அதிகாலையில், குறிப்பாக அதிகாலை 2 மணி முதல் 8 மணி வரை உடலின் இரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும். சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு இது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தாது. இருப்பினும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அதிகாலை பொழுது விறுவிறுப்பான நடை பயிற்சி செய்து வந்தால் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

நடைப்பயிற்சி செய்வதற்கு முன் இதை தெரிந்து கொள்ளவும்

  • புதிதாக நடைப்பயிற்சி செய்ய தொடர்ங்குபவர்கள் மருத்துவரை ஒருமுறை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
  • நடைப்பயிற்சியை மெதுவாக தொடங்கி படிப்படியாக வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
  • நடைப்பயிற்சி செய்வதற்கு முன் பின் இருக்கக்கூடிய இரத்த சர்க்கரை அளவுகளை கண்காணிக்கவும். இரத்த சர்க்கரையின் அளவுகளை பொறுத்து உணவின் நேரத்தை மாற்றி அமைக்கவும்.
  • நடைப்பயிற்சி செய்ய தொடங்கும் பொழுது 3-5 நிமிடங்களுக்கு மெதுவாகவும் அதற்குப் பிறகு 20-25 நிமிடங்கள் வேகமாகவும் நடக்கலாம். பின் வேகத்தை குறைத்து மெதுவாக பயிற்சியை நிறுத்தலாம்.
  • நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது கால்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்களுக்கு பொருந்தக்கூடிய சரியான காலணிகளை தேர்வு செய்து அணியவும்.
  • நடைப்பயிற்சிக்கு பிறகும் கால்களை சுத்தமாக கழுவுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் கால்களில் ஏற்படும் தொற்று மற்றும் காயங்களை தடுக்கலாம்.

how to control diabetes

எப்போது நடைபயிற்சி செய்யலாம்?

அதிகாலை நேரத்தில் இரத்த சர்க்கரையின் அளவுகள் உச்சம் பெறும் நேரத்தில் நடை பயிற்சி செய்வது நல்லது. காலையில நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் ஒவ்வொரு உணவிற்கு பிறகும் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம்.

எவ்வளவு நேரம் நடைபயிற்சி செய்யலாம்?

வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது நடை பயிற்சி செய்வது நல்லது. ஒரு நாளில் 15-30 நிமிட நடைப்பயிற்சி செய்யலாம் அல்லது சுமார் 2500 படிகளை இலக்காக எடுத்துக்கொள்ளலாம். உங்கள் சகிப்புத்தன்மை உயரும்பொழுது, உங்கள் இலக்கை கணிசமாக அதிகரித்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்பு முதல் பார்வையை மேம்படுத்துவது வரை முலாம் பழத்தில் இவ்வளவு நன்மைகளா!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]