herzindagi
benefits of muskmelon for summer

Muskmelon Benefits : எடை இழப்பு முதல் பார்வையை மேம்படுத்துவது வரை முலாம் பழத்தில் இவ்வளவு நன்மைகளா!

முலாம் பழம் சரும மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மை தரும். முலாம் பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் படித்தறியலாம்…
Editorial
Updated:- 2023-04-28, 09:32 IST

கோடைக்கு இதம் தரும் இந்த முலாம்பழம் சுவை மற்றும் சதை பற்று நிறைந்தது. முலாம் பழத்தை குளிர்வித்து சாப்பிட்டால் சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும். இவை எடை இழப்பு, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளன. இவை உங்கள் கண் பார்வையை மேம்படுத்துவதுடன், சிறுநீரக கற்களுக்கும் நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

கோடையில் முலாம் பழங்களை உங்கள் அன்றாட உணவை சேர்த்துக் கொள்வதால் உடலில் ஏராளமான நல்ல விளைவுகளை பார்க்க முடியும். அவை என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் விரைவில் கர்ப்பம் தரிக்க உதவும் எளிய யோகாசனங்கள்

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

முலாம்பழங்களில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

வயிற்று புண்களை ஆற்றும்

முலாம்பழங்களில் மிகச்சிறந்த அளவில் வைட்டமின் C உள்ளது. இது வயிற்றுப் புண்களை சரி செய்வது முக்கிய பங்கு வகிக்கிறது.

சிறுநீரக கற்கள்

முலாம்பழத்தில் உள்ள ஆக்ஸிகைனில் சிறுநீரக பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கண் பார்வையை மேம்படுத்தும்

முலாம்பழத்தில் அதிக அளவு வைட்டமின் A உள்ளது. இது கண்களின் தசைகளை வலுப்படுத்துகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் கண் சார்ந்த பிரச்சனைகளை தடுக்கலாம்.

musk melon benefits for weight loss

எடை இழப்பு

முலாம் பழத்தில் மிகக் குறைந்த அளவு கொழுப்பும், அதிக அளவு பொட்டாசியமும் உள்ளது. உடலால் எளிதில் ஜீரணிக்க கூடிய நல்ல கார்போஹைட்ரேட்கள் இப்பழத்தில் உள்ளன. மேலும் முலாம் பழம் மற்றும் அதன் விதையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், இவை உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

முலாம் பழத்தில் மிகக் குறைவான அளவே கொழுப்பு உள்ளது. மேலும் நார்ச்சத்து நிறைந்த இந்த முலாம் பழம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

கர்ப்பிணிகளுக்கு நல்லது

இதில் அதிக அளவில் உள்ள ஃபோலேட் அதிகப்படியான சோடியத்தை அகற்ற உதவுகிறது. மேலும் கர்ப்பிணிகளின் நீர்ப்பிடிப்பு பிரச்சனைகளையும் குறைக்கிறது.

தூக்கமின்மையை போக்கும்

முலாம் பழத்தில் உள்ள பண்புகள் மூளையின் நரம்புகள் மற்றும் தசைகளை தளர்த்துகின்றன. இது தூக்கமின்மை போன்ற தூக்கம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும்.

மாதவிடாய் வலிக்கு நிவாரணம்

muskmelon benefits for summer

ஆராய்ச்சியின் படி, முலாம்பழத்தில் உள்ள வைட்டமின் C மாதவிடாய் நாட்களில் ஏற்படும் தசை பிடிப்பிலிருந்து விடுபட உதவுவதாக தெரியவந்துள்ளது. இதனுடன் மாதவிடாய் இரத்தப்போக்கும் சீராக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: கோடை காலத்திற்கு ஏற்ற ஆயுர்வேதிக் டயட் டிப்ஸ்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]